அவங்க கூட மட்டும் கூட்டு சேர்ந்தால் விஜய் கட்சி விளங்காது.. கள நிலவரத்தை உடைக்கும் பத்திரிக்கையாளர் மணி.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் மணி அளித்துள்ள சமீபத்திய பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2011-ம் ஆண்டும் எடப்பாடியின் கணக்கும்:

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விஜயகாந்தின் தேமுதிக எப்படி ஒரு தவிர்க்க முடியாத தேவையாக இருந்ததோ, அதேபோன்ற ஒரு சூழல் தான் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS) ஏற்பட்டுள்ளதாக மணி குறிப்பிடுகிறார்.

“கரூர் சம்பவத்தின் போது விஜய்க்கு அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்ட ஆதரவு, விஜய் எப்படியாவது தங்களது கூட்டணிக்கு வந்துவிடுவார் என்ற அதிமுகவின் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆனால், விஜய்யைப் பொறுத்தவரை அவர் அதிமுகவுடன் இணைவது சாத்தியமில்லாத ஒன்று” என மணி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

admk tvk
admk tvk

விஜயகாந்த் வேறு.. விஜய் வேறு:

விஜயகாந்துடன் விஜய்யை ஒப்பிடுவது தவறு எனக் குறிப்பிட்ட மணி, அன்று நிலவிய அரசியல் சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறுகிறார். “அன்று விஜயகாந்த் கையாண்ட அரசியல் வியூகம் வேறு, இன்று விஜய் பயணிக்க நினைக்கும் பாதை வேறு. அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அது அவருக்குப் பெரிய அளவில் கை கொடுக்காது, சொல்லப்போனால் அது அந்தத் தேர்தலோடு முடிந்துவிடும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

விஜய் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக மணி கணிக்கிறார். விஜய்யின் அரசியல் வருகை குறிப்பாக இரண்டு முக்கிய வாக்கு வங்கிகளைப் பாதிக்கும் என அவர் விளக்குகிறார்,

அதிமுக வாக்கு வங்கி:

விஜய் பிரதானமாக அதிமுகவின் வாக்குகளைத் தான் குறிவைப்பதாகத் தெரிகிறது.

இளைஞர்கள் மற்றும் பெண்கள்:

திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளிடமும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்களின் ஆதரவு விஜய்யை நோக்கி நகரப் போகிறது.

திமுக – அதிமுகவுக்கு இரட்டை நெருக்கடி:

விஜய்யின் இந்த நகர்வு அதிமுகவிற்கு மட்டுமல்ல, ஆளுங்கட்சியான திமுகவிற்கும் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும். இரு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய ஒரு சக்தியாக விஜய் உருவெடுப்பார் என்று மணி தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment