கருத்துக்கணிப்பை மாற்ற வேண்டும் என்று சொல்லியில் மாற்ற முடியாது என்று சொன்ன JVC ஸ்ரீராம்.. நான் என்ன களத்தில் பார்த்தேனே அதை தான் ரிசல்ட்டாக தருவேன்.. உங்களுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் இருந்தால் அது உங்கள் பிரச்சனை என்று தைரியமாக கூறிய ஸ்ரீராம்.. எந்த ஊடகமும் வெளியிட மறுத்ததால் எக்ஸ் பக்கத்தில் எக்சிட்போல் கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஸ்ரீராம்.. அப்படி என்ன தான் சொல்லியிருந்தார்?

கருத்துக்கணிப்பை மாற்ற வேண்டும் என்று சொல்லியில் மாற்ற முடியாது என்று சொன்ன JVC ஸ்ரீராம்.. நான் என்ன களத்தில் பார்த்தேனே அதை தான் ரிசல்ட்டாக தருவேன்.. உங்களுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் இருந்தால் அது உங்கள் பிரச்சனை என்று தைரியமாக கூறிய ஸ்ரீராம்.. எந்த ஊடகமும் வெளியிட மறுத்ததால் எக்ஸ் பக்கத்தில் எக்சிட்போல் கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஸ்ரீராம்.. அப்படி என்ன தான் சொல்லியிருந்தார்?

தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களுக்கு இடையே நிலவும் பனிப்போர் தற்போது எக்சிட் போல் கணிப்புகளின் நம்பகத்தன்மை குறித்த விவாதமாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ட்வீட் ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடுக்கப்படுவதற்கு இருந்த ஒரு கருத்து கணிப்பாளரின் குரல் என்று அவர் ஜேவிசி ஸ்ரீராமின் கணிப்புகள் தொடர்பாக குறிப்பிட்டிருப்பது, ஊடக நிறுவனங்களின் பின்னணியில் நடக்கும் அழுத்தங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நேர்மையான முறையில் கள ஆய்வு செய்பவர்களின் குரல்கள் எவ்விதம் நசுக்கப்படுகின்றன என்பதையே பி.எல். சந்தோஷின் இந்த ரியாக்ஷன் உணர்த்துகிறது.

ஜேவிசி ஸ்ரீராம் பொதுவாக தனது ‘ஜேவிசி போல்’ முடிவுகளை ‘டைம்ஸ் நவ்’ போன்ற முன்னணி ஆங்கில தொலைக்காட்சிகளில்தான் வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்த முறை தேர்தலுக்கு முன்பாக டைம்ஸ் நவ் தரப்பிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அனைத்தையும் மாற்றியுள்ளது. ஜேவிசியின் கணிப்பு முடிவுகளை பெற்றுக்கொண்ட அந்த தொலைக்காட்சியின் முக்கிய அதிகாரி ஒருவர், அதில் சில மாற்றங்களை செய்ய வலியுறுத்தியுள்ளார். கள ஆய்வில் எந்த கூட்டணி வெற்றி பெறும், எது தோல்வியடையும் என்று ஜேவிசி தெளிவாக குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த புள்ளிவிவரங்களை அப்படியே ‘உல்ட்டாவாக’ மாற்றி சொல்ல வேண்டும் என்று அந்த அதிகாரி அழுத்தம் கொடுத்துள்ளார். தங்களுக்கு பயங்கரமான அரசியல் அழுத்தம் இருப்பதால், முடிவுகளை மாற்றி ஒளிபரப்ப வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஜேவிசி ஸ்ரீராம் ஊடகங்களின் இத்தகைய நெருக்குதலுக்கு பணியாமல் மிகவும் நேர்மையான முறையில் நடந்துகொண்டார். “களத்தில் நான் கண்ட உண்மையைத்தான் சொல்லியிருக்கிறேன், யாருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எனது முடிவுகளை மாற்றிக்கொள்ள மாட்டேன்” என்று அவர் உறுதியாக தெரிவித்துவிட்டார். இதனால், நீண்ட காலமாக தனது கணிப்புகளை வெளியிட்டு வந்த டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இந்த முறை ஜேவிசிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஒரு நேர்மையான கருத்து கணிப்பாளரின் உழைப்பை விட, அரசியல் அழுத்தங்களுக்குப் பணிவதையே அந்த ஊடக நிறுவனம் தேர்ந்தெடுத்தது ஜேவிசியைப் போன்றவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

டைம்ஸ் நவ் மட்டுமின்றி, ஜேவிசி ஸ்ரீராம் அணுகிய மற்றொரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சியிலும் இதே போன்ற கசப்பான அனுபவமே அவருக்கு கிடைத்தது. அங்குள்ள நிர்வாகத்தினர், ஜேவிசி மற்றொரு மாநிலத்தில் எடுத்திருந்த கணிப்பு முடிவுகளை சுட்டிக்காட்டி, அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்ய நிபந்தனை விதித்தனர். தனது தொழில்முறை நேர்மையில் துளியும் சமரசம் செய்துகொள்ள விரும்பாத ஜேவிசி, அந்தத் தொலைக்காட்சியின் நிபந்தனையையும் நிராகரித்தார். இவ்வாறு முன்னணி ஊடகங்கள் அனைத்தும் கதவுகளை அடைத்த சூழலில், அவர் தனது கணிப்பு முடிவுகளை தொலைக்காட்சிகளில் வெளியிட முடியாமல் போனது.

இறுதியாக, ஊடகங்களின் இருட்டடிப்புக்கு அஞ்சாத ஜேவிசி ஸ்ரீராம், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலேயே அனைத்து கணிப்பு முடிவுகளையும் பகிரங்கமாக வெளியிட்டார். நேயர்களின் புரிதலுக்காகவும், ஊடகங்களின் போலி முகத்திரையை அம்பலப்படுத்தவும் ஜேவிசியின் அனுமதியுடன் இந்தத் தகவல்கள் தற்போது பொதுவெளிக்கு வந்துள்ளன. ஒரு கருத்துக் கணிப்பாளரின் குரலை மௌனமாக்க முயன்ற ஊடகங்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளதையே பி.எல். சந்தோஷின் பதிவும், ஜேவிசியின் உறுதியும் காட்டுகின்றன. இந்தச் சம்பவம், இன்றைய ஊடகச் சூழலில் உண்மையைப் பேசுபவர்களுக்கு எத்தகைய சவால்கள் காத்திருக்கின்றன என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.

https://x.com/sreeramjvc/status/2050428949373890616

Leave a Comment