உருவானது டிட்வா புயல்.. கனமழை அப்டேட் கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்..

இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதற்கு டிட்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னையில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த புயல் வங்கக்கடலில் நிலை கொண்டிருப்பதால் வட தமிழகம் புதுவை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆந்திர கடலோரப் பகுதிகளை வருகிற 30-ஆம் தேதி கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை உடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும் என்பதால் குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு எந்த மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment