தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயகத் திருவிழாவின் முக்கிய கட்டமாக கருதப்படும் இந்த வாக்கு எண்ணிக்கையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பகட்ட நிலவரங்களின்படி, ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.
தற்போதைய அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணி 29 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக 17 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களில் முன்னிலை பெற்று தனது அரசியல் வருகையை உறுதி செய்துள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி தற்போது வரை தபால் வாக்குகளில் முன்னிலை கணக்கை தொடங்கவில்லை.
இந்தத் தேர்தலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களையே நோக்கியிருப்பது இம்முடிவுகளின் மூலம் தெரியவருகிறது. இருப்பினும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும்போது இந்த நிலவரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இறுதி முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
தபால் வாக்குகள் முன்னிலை:
திமுக : 29
திமுக 17
தவெக 2
நாதக 0