காங்கிரஸ் தொண்டர்கள் எல்லாம் விசிலுக்கு ஓட்டு போடுங்க.. வாய்மொழி உத்தரவு பிறப்பித்தாரா ராகுல் காந்தி? தேர்தலுக்கு பின் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வாய்ப்பே இல்லை.. காங்கிரஸ் போய்விட்டால் விசிகவும் போய்விட வாய்ப்பு.. இரண்டும் போய்விட்டால் திமுகவை விட்டு சிறுபான்மையினர் ஓட்டு மொத்தமாக போய்விடுமா?

தமிழக அரசியல் தளம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. குறிப்பாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் நிலவும் உரசல்கள் மற்றும் ராகுல் காந்தியின் அணுகுமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ராகுல் காந்திக்கு தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைப்பதில் பெரிய அளவில் விருப்பமில்லை என்றும், சோனியா காந்தி மற்றும் கார்கே போன்ற மேலிட தலைவர்களின் அழுத்தத்தினாலேயே அவர் இக்கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ராகுல் காந்தியின் மனசாட்சியாக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களின் கருத்துக்கள் கூட்டணியில் உள்ள விரிசலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. காங்கிரஸுக்கு மிகக் குறைவான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, ராகுல் காந்தி எப்படி ஆர்வமாகப் பிரச்சாரத்திற்கு வருவார் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

கூட்டணி தர்மத்திற்கு மாறாக சில சர்ச்சைக்குரிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சென்னை கிரிக்கெட் போட்டியின் போது ‘விசில் போடு’ என்று பிரவீன் சக்கரவர்த்தி ட்வீட் செய்தது, மறைமுகமாக மற்றொரு தரப்பிற்கு ஆதரவாக பார்க்கப்பட்டு விவாதமானது.

மேலும், புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், திமுக நின்ற பல இடங்களில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கியதும், அவர்கள் ராகுல் காந்தியுடன் விமான நிலையத்தில் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இது போன்ற போட்டி வேட்பாளர்களை மேலிடம் ஊக்குவிக்காது என்றாலும், ராகுலின் இந்த செயல் கூட்டணிக்குள் இருக்கும் கசப்புணர்வையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலும் தமிழகத்திலும் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்வதில் ஆர்வம் காட்டாத ராகுல் காந்தி, காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் விசிலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவை ராகுல் காந்தி பிறப்பித்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே பெண்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள், நடுநிலையாளர்கள் வாக்குகள் விஜய்க்கு போகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் ஓட்டும் விஜய்க்கு சென்றால் விஜய்யின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.

Leave a Comment