நடிகை சாரா அலிகான், கரப்பான்பூச்சிகளை வச்சி செய்துவிட்டார்.. இந்தியாவில் சட்டம் ஒழுங்கு கெடுவதே உன்னை போன்ற கரப்பான்பூச்சிகளால் தான்.. நீ சட்டம் ஒழுங்கு செத்துருச்சு.. ஜனநாயகன் செத்துருச்சுன்னு முதலைக்கண்ணீர் வடிக்கிறியா? வீட்டுல கரப்பான்பூச்சி இருந்தாலே ரெட் ஹிட் அடிச்சு கொல்வோம், நாட்டுல கரப்பான்பூச்சி இருந்தா சும்மா விடுவோமா? லெப்ட் ஹேண்ட்ல நசுக்கி மூலையில போட்டுடுவோம்…
பாலிவுட் பிரபல நடிகை சாரா அலிகான், இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று முதலைக்கண்ணீர் வடித்த சி.ஜே.பி அமைப்பின் அபிஜித் டிப்கேவிற்கு சமூக வலைத்தளத்தில் கொடுத்த அதிரடி மற்றும் செருப்படி பதில் தற்போது தேசிய அளவில் பெரும் வைரலாகி வருகிறது. இந்தியாவில் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்க முயலும் போலி அமைப்புகளையும், அவர்களின் சதி வேலைகளையும் துணிச்சலாகத் தோலுரித்துக் காட்டியுள்ள சாராவின் இந்த அறிக்கை, ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஒருவர் தேசவிரோதச் சக்திகளுக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்துள்ள சம்பவம் சி.ஜே.பி கும்பலுக்குப் பெரும் பலத்த அடியாக விழுந்துள்ளது.
டெல்லியில் சட்டவிரோதப் போராட்டத்தில் ஈடுபட்ட சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகிய இருவரை டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் காவலில் எடுத்தனர். சட்டம் தன் கடமையைச் செய்த நிலையில், வழக்கம் போலத் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அபிஜித் டிப்கே, “இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது, இனி இங்க ஜனநாயகமே இல்லை” என்று பொய்ப் பிரச்சாரத்தை அரங்கேற்ற முயன்றார். சட்டம் – ஒழுங்கை மீறிவிட்டு, கைது நடவடிக்கை பாய்ந்ததும் பாவமாக மூஞ்சியை வைத்துக்கொண்டு கதறும் இவர்களின் வழக்கமான நாடகத்தை இந்த வீடியோவின் மூலம் அவர் மீண்டும் தொடங்கினார்.
அபிஜித் டிப்கேயின் இந்த போலி வீடியோவைக் கண்ட பாலிவுட் நடிகை சாரா அலிகான், சற்றும் யோசிக்காமல் மிகக் கடுமையான வார்த்தைகளால் அவரை விமர்சித்துள்ளார். “வீட்டிலோ அல்லது நாட்டின் எந்த மூளையிலோ கரப்பான் பூச்சிகளைக் கண்டால், அவற்றை ஒழிப்பதற்கு ஒரே வழி ‘ரெட் ஹிட்’ தெளிப்பது தான்” என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சாராக அலிகான் பதிவிட்டுள்ளார். கரப்பான் பூச்சிகள் போல நாட்டின் அமைதியைக் கெடுக்கும் இந்த சி.ஜே.பி கும்பலை மிகக் கச்சிதமாக அடையாளப்படுத்தி அவர் கொடுத்த இந்தப் பதில் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
தேசப் பற்றும் விழிப்புணர்வும் கொண்ட ஒரு பாலிவுட் நட்சத்திரம், நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற போலி அமைப்புகளை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று பகிரங்கமாக விமர்சித்துத் தோலுரித்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் தேசவிரோதிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதைச் சாரா அலிகான் தனது ஒற்றைப் பதிவின் மூலம் பாலிவுட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உணர்த்தியுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் சாராவின் தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.
நாட்டின் ஜனநாயக அமைப்புகளையும் சட்டத்தையும் மதிக்காமல், வெளிநாட்டு நிதியுதவியுடன் இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தத் துடிக்கும் சி.ஜே.பி அமைப்பின் முகத்திரை இதன் மூலம் பாலிவுட் மட்டத்திலும் அப்பட்டமாகக் கிழிந்துள்ளது. இவ்வளவு காலம் தங்களைச் சமூகச் செயற்பாட்டாளர்கள் போலக் காட்டிக்கொண்டு உலா வந்த அபிஜித் டிப்கே மற்றும் அவரது கூட்டாளிகளின் உண்மையான சொரூபம் என்ன என்பதைச் சாரா அலிகானின் இந்தத் துணிச்சலான கருத்துப் பதிவு உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சாரா அலிகானின் இந்த அதிரடிப் பதிலால், சமூக வலைத்தளங்களில் வீரவசனம் பேசி வந்த அபிஜித் டிப்கே மற்றும் சி.ஜே.பி ஆதரவாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேசவிரோதக் கூட்டத்திற்கு எதிராகத் துணிச்சலாக நின்று குரல் கொடுத்த சாரா அலிகான் மீதான மரியாதையும் அபிமானமும் மக்கள் மத்தியில் பலமடங்கு உயர்ந்துள்ளது. போலிப் புரட்சியாளர்களின் சதிவேலைகள் இனி இந்தியாவில் ஒருபோதும் எடுபடாது என்பதற்கு இந்தச் சம்பவமே மிகச் சிறந்த சான்றாகும்.