நடிகர் விஜய்யை, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடன் ஒப்பிட்டு, மக்கள் சினிமா மாயையில் ஏமாந்துவிடக் கூடாது என்று திருப்பூர் தெற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜ் எச்சரித்துள்ளார். அவர் மேடையில் பேசிய இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 கோடி சம்பளம் vs. ரியாலிட்டி :
“விஜய் பறந்து பறந்து 50 பேரை அடிக்கும் சண்டைக் காட்சிகளுக்காக 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஆனால், ‘ஸ்டாலினால் அது முடியாது’ ஆமாம், நிஜத்தில் ஸ்டாலினால் முடியாது தான்” என்று செல்வராஜ் வெளிப்படையாகப் பேசினார்.
எம்.ஜி.ஆர். உடன் விஜய்க்கு ஒப்பீடு :
அவர் தொடர்ந்து பேசுகையில், “இந்த சாகசங்களைப் பார்க்கும் குழந்தைகள் எளிதில் ஏமாந்து விடுகின்றனர். நீங்கள் முன்பு, சினிமாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். இடம் ஏமாந்தது போல, இப்போதும் நடிகர் விஜயிடம் ஏமாந்து விடாதீர்கள்” என்று மக்களைப் பார்த்து கடுமையாக எச்சரித்தார்.
எம்.எல்.ஏ. செல்வராஜ், ஒருபுறம் விஜய்யின் சினிமா அதிரடியையும் 100 கோடி ரூபாய் சம்பளத்தையும் குறிப்பிட்டு, மறுபுறம் அரசியல் பிம்பம் கட்டமைப்பதில் விஜய்யை மறைமுகமாக எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளது, தமிழக அரசியல் மற்றும் சினிமா விவாதங்களுக்கு மேலும் தீ மூட்டியுள்ளது.