ஸ்டாலின் அரசின்போது மூடி மறைக்கப்பட்ட வைத்திலிங்கம் ஊழல் வழக்கு.. மீண்டும் தொடர நீதிமன்றம் ஒப்புதல்.. முதல்வர் விஜய் எடுத்த முயற்சிக்கு வெற்றி.. ஒரே ஒரு பத்திரிகை கட்டுரையால் மீண்டும் விசாரிக்கப்படும் வழக்கு.. வைத்திலிங்கம் தப்பிக்கவே முடியாது.. அவர் மட்டுமல்ல.. விஜய் ஆட்சியில் ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது…

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுக எம்.எல்.ஏ.வுமான ஆர்.வைத்திலிங்கம் மீதான 27.9 கோடி ரூபாய் ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த முக்கிய சட்ட நடவடிக்கையானது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திங்கம் மீது, ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்திடமிருந்து திட்ட அனுமதி வழங்குவதற்காக 27.9 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில்தான் தற்போது நீதிமன்றத்தின் மூலம் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ஒரு மாதத்திற்குள், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த ஊழல் வழக்கைத் கைவிட முடிவு செய்தது. ஆரம்பத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (DVAC) தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில், வைத்திங் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை முடிக்க முயன்றனர்.

இதற்கிடையில், தி நியூ இந்தியன் எக்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த ‘ஃப்ரீ பிரஸ் ஜெர்னல்’ பத்திரிகையில் வெளிவந்த அதிரடியான செய்திதான் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முக்கியக் காரணமாக அமைந்தது. அந்தப் புலனாய்வுக் செய்தி வெளிவந்து சரியாக 45 நாட்கள் கடந்த நிலையில், தமிழக அரசின் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

மே 10 அன்று முதல்வர்ப் பொறுப்பேற்ற சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, முந்தைய ஆட்சியின் கீழ் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்த மறுவிசாரணை கோரப்பட்டுள்ளது. செய்தித்தாளின் வெளிச்சத்திற்கு வந்த இந்த முறைகேடு விவகாரம், அரசாங்கத்தை மீண்டும் இந்த வழக்கைச் சட்ட ரீதியாகக் கையில் எடுக்கத் தூண்டியது.

தற்போது சென்னை அமர்வு நீதிமன்றம், மாநில லஞ்ச ஒழிப்புத்துறையை இந்த விசாரணையை விரைந்து நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை மற்றும் அறப்போர் இயக்கம் போன்ற அமைப்புகளும் இந்த வழக்கின் மூடுதலை எதிர்த்துத் தொடர்ந்த போராட்டங்களும் இந்த வழக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

Leave a Comment