முதல்வர் நாற்காலி யாருக்கு?.. எடப்பாடியை டெட் பாடியாக்கிய விஜய்.. 2026 முதல்வர் ரேஸில் செம ட்விஸ்ட்..

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வருகைக்குப் பிறகு திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான இருமுனைப் போட்டி, தற்போது மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் அரசியல் ஆய்வு அமைப்பான இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் (IPDS) வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

கருத்துக்கணிப்பு முடிவுகள்: யார் முதலிடம்?
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், “தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக யாரை விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்கள் பின்வருமாறு:

  1. மு.க. ஸ்டாலின் = திமுக (DMK)
  2. விஜய் =தவெக (TVK)
  3. எடப்பாடி பழனிசாமி =அதிமுக (AIADMK)
  4. அண்ணாமலை / பாஜக
  5. பிறர் / நாம் தமிழர்

விஜய்யின் அதிரடி என்ட்ரி:
கட்சித் தொடங்கி ஒரு சில காலத்திலேயே, பல தசாப்தங்களாக அரசியலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியைப் பின்னுக்குத் தள்ளி விஜய் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். குறிப்பாக 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்குப் பெருமளவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலின் முதலிடம்:
தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது செல்வாக்கைச் சீராகத் தக்கவைத்து முதலிடத்தில் நீடிக்கிறார். அரசின் நலத்திட்டங்கள் மற்றும் ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் அவருக்கு ஆதரவாக உள்ளன.

அதிமுக-வுக்கு பின்னடைவு:
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் எழுச்சி அதிமுக-வின் வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்தக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

மாறும் அரசியல் வரைபடம்:
லயோலா முன்னாள் மாணவர்களின் இந்தக் கருத்துக்கணிப்பு மட்டுமின்றி, சமீபத்திய சி-வோட்டர் (CVoter) மற்றும் இந்தியா டுடே (India Today) ஆய்வுகளும் விஜய்யை ஒரு முக்கியமான சக்தியாகவே சித்தரிக்கின்றன. விஜய்யின் கட்சி 2026-ல் 25% முதல் 30% வரை வாக்குச் சதவீதத்தைப் பெற வாய்ப்புள்ளதாக அவரது கட்சித் தரப்பு உள் மதிப்பீடுகள் (Internal Survey) தெரிவிக்கின்றன.

2026 தேர்தலில் திராவிடக் கட்சிகளின் வாக்குகளை விஜய் பிரிப்பதன் மூலம், தமிழக அரசியலில் இதுவரை இல்லாத ஒரு புதிய கூட்டணி ஆட்சிக்கோ அல்லது கடும் நெருக்கடியான சூழலுக்கோ வழிவகுக்கும் எனஅரசியல் விமர்சகர்களின் கணிப்பாக இருக்கிறது.

Leave a Comment