கூட்டணி கட்சின்னா குடைச்சல் கொடுக்குற கட்சியா மாற கூடாது.. திமுக கிட்ட இருக்கும்போது எப்படி அமைதியா இருந்தீங்களோ, அதே மாதிரி அமைதியா இருக்கனும்.. ஒரு அரசோட வேலை எது? ஒரு முதல்வரோட வேலை எதுன்னு எனக்கு தெரியும்.. எனக்கு நீங்க ஒன்னும் பாடம் எடுக்க வேண்டாம்.. மக்கள் பிரச்சனை பத்தி பேசனும்ன்னா மட்டும் எங்கிட்ட வாங்க.. உங்க அரசியல் அரிப்பை சொரிஞ்சுவிட நான் ஆளில்லை.. இஷ்டம்ன்னா இருங்க.. இல்லாட்டி ஆதரவை வாபஸ் வாங்கிட்டு போயிகிட்டே இருங்க.. கறாராக சொல்லிவிட்டாரா முதலமைச்சர் விஜய்?

தமிழக அரசியல் களத்தில் இப்போது கூட்டணி கட்சிகளுக்கும் முதல்வர் விஜய்க்கும் இடையே வெடித்துள்ள பனிப்போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சிகள் என்றால் அரசுக்குக் குடைச்சல் கொடுத்து மிரட்டி காரியம் சாதிக்கும் இடமாக அதைப் பார்க்கக் கூடாது என்றும், திமுக ஆட்சியில் இருந்தபோது எப்படி எந்தவித சலசலப்புமின்றி அமைதியாக வாலாட்டாமல் இருந்தீர்களோ, அதேபோன்றுதான் இங்கேயும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் விஜய் மிகவும் கறாராக எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்திற்கே எதிராகக் குரல் கொடுப்பதும், தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கூட்டணிக்குக் காட்டிய அதே விசுவாசத்தையும், மறைமுக ஆதரவையும் இங்கும் தொடர நினைப்பவர்கள் தாராளமாகத் தங்களது ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டு வெளியேறலாம் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். உங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த வேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாது, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எட்டு கோடி மக்களை நம்பி மட்டுமே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்துள்ளேன் என்று அவர் காட்டமாகப் பேசியிருப்பது கூட்டணிக் கட்சிகளிடையே நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு அல்லது நான்கு சீட்டுகளை வைத்துக்கொண்டு, தங்களது சுயநலனுக்காகவும் கட்சிப் பதவிக்காகவும் அரசாங்கத்தைத் தொடர்ந்து மிரட்டிப் பார்ப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அவர் பகிரங்கமாகவே விளாசியுள்ளார்.

மக்களுக்குத் தேவையான ஆக்கபூர்வமான பிரச்சனைகளைப் பற்றிப் பேச மட்டுமே தன்னைத் தேடி வர வேண்டும் என்றும், மாறாகச் சொந்தக் கட்சிக்கு போஸ்டிங் வாங்கித் தருவது, அமைச்சர் பதவி கேட்பது போன்ற தற்காலிக பேரம் பேசும் அரசியலைத் தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் விஜய் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அப்படிப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று மிரட்டினால், அந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயந்து நடுங்குகிற பலகீனமான முதல்வர் நானல்ல என்பதை அவர் மிகத் தெளிவாகப் புரியவைத்துள்ளார். கூட்டணி தர்மத்தின் பெயரால் நடக்கும் இந்த மலிவான அரசியல் நாடகங்களுக்குத் தன் ஆட்சியில் இடமில்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில், முஸ்லிம் லீக் கட்சி மட்டுமே எந்தவித தொல்லையும் கொடுக்காமல், அரசாங்கத்திற்கு எவ்வித நெருக்கடியும் தராமல் மிக அமைதியாகத் தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற சில கூட்டணி கட்சிகள் தேவையில்லாத நெருக்கடிகளைக் கொடுத்து வருவதாகவும், அரசை முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில், முதல்வர் விஜய் விரைவில் ஒரு அதிரடி அரசியல் முடிவை எடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. மிரட்டல்களுக்குப் பணிந்து போவதை விட, தனித்து நின்று போராடுவதே மேல் என்ற உறுதியான நிலைப்பாட்டிற்கு அவர் வந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதிலும், மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் மட்டுமே தனது முழு கவனமும் இருக்குமே தவிர, சுயநலக் கூட்டணிக் கட்சிகளின் அடிவருடித்தனமான கோரிக்கைகளுக்கு ஒருபோதும் செவிசாய்க்கப் போவதில்லை என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். ஒரு முதல்வராக நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும், எந்தெந்த இட்த்தில் எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், யாரும் தனக்குப் பாடம் எடுக்க வர வேண்டாம் என்றும் அவர் கறாராகத் தெரிவித்துள்ளார். மக்களின் நலன் மட்டுமே தனக்கு முக்கியம் என்று அவர் காட்டும் இந்த அதிரடித் திடம் தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி பலத்தை நம்பி அரசாங்கத்தை மிரட்டலாம் என்ற கட்சிகளின் கணக்குகளைத் தனது ஒற்றைப் பேச்சால் தகர்த்தெறிந்துள்ளார் விஜய். இஷ்டம் இருந்தால் நிபந்தனையின்றி ஆதரவு தாருங்கள், இல்லையென்றால் தாராளமாக வெளியேறலாம் என்ற அவரது இந்தத் துணிச்சலான அணுகுமுறை மாநில அரசியல் பரப்பில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் தமிழத்து அரசியலில் எந்தக் கட்சியும் விஜய்யை எளிதில் எடைபோட்டுவிட முடியாது என்பதை இந்த அதிரடி நடவடிக்கை அடித்துக் கூறியுள்ளதுடன், தமிழக அரசியலின் திசையை மாற்றும் ஒரு மைல்கல்லாகவும் இது பார்க்கப்படுகிறது.

Leave a Comment