சென்னை மட்டும் வளர்ந்தால் போதுமா? சென்னை மட்டும் தான் தமிழ்நாடா? எல்லா தொழிற்சாலைகளும் சென்னைக்கே வந்தால் மத்த நகரங்கள் வளர்வது எப்படி? இங்க தான் வருது தவெக அரசு..

சென்னை மட்டும் வளர்ந்தால் போதுமா? சென்னை மட்டும் தான் தமிழ்நாடா? எல்லா தொழிற்சாலைகளும் சென்னைக்கே வந்தால் மத்த நகரங்கள் வளர்வது எப்படி? இங்க தான் வருது தவெக அரசு.. திருச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம்.. ஆய்வு பணிகள் தொடக்கம்.. எம்பி துரை வைகோவும் முழு ஒத்துழைப்பு.. இனி சென்னை மாதிரி திருச்சியும் கவனிக்கப்படும் நகரமாகும்.. அடுத்து மதுரை, ராமநாதபுரம், நெல்லை, கோவைன்னு எல்லா நகரங்களை முன்னேத்துங்க விஜய் சார்…

திருச்சிக்கு கிடைக்கவிருக்கும் Multi Modal Logistics Hub (MMLH) / Dry Port திட்டம், மத்திய தமிழ்நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனையாக அமையக்கூடியதாக பார்க்கப்படுகிறது. திருச்சியில் இந்தத் திட்டத்தை அமைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக விரிவான ஆய்வுப் பணிகளை TIDCO தொடங்க உள்ளது. பல்வேறு போக்குவரத்து வழிகளை ஒருங்கிணைத்து சரக்குகளை கையாளும் வகையில் இந்த மையம் உருவானால், திருச்சியின் பொருளாதார முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்.

இன்றைக்கு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்று சரக்குகளை துறைமுகங்களுக்கு கொண்டு செல்வதற்கான நேரமும் செலவும். திருச்சியில் Dry Port போன்ற வசதி உருவானால், சரக்குகளை ஒருங்கிணைத்து திட்டமிட்ட முறையில் கையாளும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் குறையவும், சரக்குகளை விரைவாக நகர்த்தவும் வாய்ப்பு உருவாகலாம். குறிப்பாக உற்பத்தித் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இது சாதகமான சூழலை உருவாக்கக்கூடும்.

இந்தத் திட்டத்தின் பயன் திருச்சி மாவட்டத்துக்குள் மட்டும் நின்றுவிடாது என்பதுதான் இதன் மிகப்பெரிய சிறப்பு. கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் செயல்படும் தொழில் நிறுவனங்களும் ஏற்றுமதியாளர்களும் இந்த லாஜிஸ்டிக்ஸ் மையத்தை பயன்படுத்த முடியும். இதனால் மத்திய தமிழ்நாட்டை ஒரே பொருளாதார மண்டலமாக இணைக்கும் வாய்ப்பும் உருவாகலாம். குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தையை விரிவுபடுத்த இது உதவக்கூடும்.

ஒரு பெரிய தொழில் திட்டம் வருவதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும். கிடங்கு வசதிகள், சரக்கு கையாளுதல், போக்குவரத்து, பேக்கேஜிங், சுங்கம் சார்ந்த சேவைகள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். இதைச் சுற்றி துணைத் தொழில்களும் வளரக்கூடிய சூழல் ஏற்படும். எனவே MMLH என்பது வெறும் சரக்கு மையம் மட்டுமல்ல; அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் தொழில் வளர்ச்சிக்கும் ஊக்கமாக அமையக்கூடிய கட்டமைப்புத் திட்டமாக பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சியை முன்னெடுத்து திருச்சியின் நீண்டகால வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. ஒரு தொகுதியின் தேவைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமல்லாமல், தொழில், வர்த்தகம், போக்குவரத்து போன்ற எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை தொடர்ந்து வலியுறுத்துவதுதான் மக்கள் பிரதிநிதித்துவத்தின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அதன் பலனை திருச்சி மட்டுமல்லாமல் மத்திய தமிழ்நாட்டின் பல மாவட்டங்களும் பெறக்கூடும்.

திருச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது புதிய சாலைகள் அல்லது கட்டிடங்கள் உருவாக்குவதோடு முடிந்துவிடக்கூடிய விஷயம் அல்ல. தொழில் வளர்ச்சிக்கு தேவையான போக்குவரத்து மற்றும் சரக்கு கட்டமைப்பை உருவாக்குவதுதான் நீண்டகால பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும். அந்த வகையில் MMLH திட்டம் செயல்படுத்தப்பட்டால், திருச்சியை மத்திய தமிழ்நாட்டின் முக்கியமான லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தொழில் மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பு உருவாகலாம். “வளர்ச்சியைப் பற்றி பேசுவது எளிது… அந்த வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவதுதான் உண்மையான மக்கள் பணி!”

 

Leave a Comment