WhatsAppல் வரும் Photo Realஆ? Geminiயிடம் கேளுங்க!

Social mediaல் தினமும் photo, video எல்லாம் வித்தியாசமா வந்துட்டே இருக்கும். அதுல எது real, எது AIனு என்று புரியாம நிறைய பேர் confuse ஆகிடுறாங்க. இந்த confusionக்கு Google ஒரு ஈசி solution கொண்டு வந்திருக்கிறது.

Google Geminiஐ பயன்படுத்தி, ஒரு photo அல்லது video AI செய்யப்பட்டதா இல்ல realஆ எடுத்ததா என்பதை check பண்ணிக்கலாம். WhatsApp, Instagram, YouTubeல் கிடைக்குற mediaகளை upload பண்ணி, “Is this AI generated image?” என்று கேள்வி கேட்டாலே Gemini analyze பண்ணி answer சொல்லிடும்.

Gemini அந்த image அல்லது videoல இருக்கும் detailsஐ scan பண்ணும். Lighting, face texture, background, movements மாதிரி cluesஐ வைத்து, இது AI contentஆ இருக்க வாய்ப்பு இருக்கா? இல்லையா? என்று explain பண்ணும். சில நேரம் ஏன் suspiciousஆ இருக்கும் என்றும் simple wordsல் சொல்லும்.

இந்த feature deepfake videos, photos, scam செய்யப்பட்ட images எல்லாத்துக்கும் இது useful. குறிப்பாக social mediaல share பண்ணுறதுக்கு முன்னாடி இந்த quick check பண்ணினா, fake newsல் சிக்காம இருக்க முடியும்.

AI content நாளுக்கு நாள் அதிகரிக்கிற இந்த காலத்துல, Google Gemini மாதிரி tools usersக்கு ஒரு safety லாக்கர் மாதிரி வேலை செய்து தருகிறது. Photo பார்த்து நம்புறதுக்கு முன்னாடி, Geminiஐ ஒரு தடவை கேட்டு பார்ப்பது smart move ஆக இருக்கும்.

Leave a Comment