விவோ மொபைலின் துணை பிராண்ட் ஆன ஐக்கூ தரமான மொபைல்களை உற்பத்தி செய்து அதை பட்ஜெட் விலையில் மக்களிடம் விற்பனை செய்து தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஐக்கூ z10 லைட் 5g போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.
தற்போது இதன் விற்பனை அமேசானில் தொடங்கிவிட்டது. மேலும் இதற்கு ஆஃபர்களையும் ஆரம்பித்துள்ளது. 4ஜிபிரேம் +128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை 9,999 ரூபாயாக இருக்கிறது. தற்போது 500 ரூபாய் இதற்கு உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதன்படி இந்த மொபைலை 9,499 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். அதே போல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியன்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் என அனைத்திற்கும் 500 ரூபாய் டிஸ்கவுண்டுடன் கிடைக்கிறது.
ஐக்கூ ஸி 10 lite 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் 1600 * 720 பிக்சல்கள் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே வருகிறது. மேலும் இது hd+ பிளஸ் சப்போர்டும் கிடைக்கிறது. இது 90 hz ரேட்டுடன் வருகிறது. 1000 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் கொடுக்கிறது, பிராஸசர் பொருத்தவரையில் மீடியா டெக்டைமண்ட் சிட்டி 6300 என்ற என்ட்ரி லெவல் சிப்செட் பொருத்தி வருகிறது.
இது தினசரி உபயோகத்திற்கும் மல்டி டாஸ்க் போன்ற வேலைகளுக்கும் சிறந்ததாக இருக்கும், மேலும் இதில் 50 mp பிரைமரி கேமரா சோனி சென்சார் கொண்டு வருகிறது. 2 எம்பி பொக்கே கேமரா உடன் வருகிறது. இதில் ஆண்ட்ராய்டு 15 ஓ எஸ் ஃபண்டச் ஓ எஸ் 15 உடன் இயங்குகிறது.
இதில் 6000 mag கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. அதனை சார்ஜ் செய்வதற்கு 15 வாட் சார்ஜிங் வசதியும் இடம் பெற்றுள்ளது. ip ரேட்டிங்கை பொறுத்த வரை ஐபி 64 சான்றிதழ் தூசி மற்றும் தண்ணீர் பாதுகாப்பு வசதி இதில் இடம் பெற்றுள்ளது. மிலிட்டரி கிரேட் ஷாக் அசிஸ்டன்ட் கொண்ட ஹை குவாலிட்டி பாடி கிடைக்கிறது. இதனால் கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபடாமல் இருக்கும்.