விஜய்யின் குருவி படத்தை தயாரித்த உதயநிதி துணைமுதலமைச்சர் ஆகலாம், எதிர்க்கட்சி தலைவர் ஆகலாம், ஆனால் அதே விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்தவர் அறநிலையத்துறையின் குழுவில் இடம்பெற கூடாதா?

விஜய்யின் குருவி படத்தை தயாரித்த உதயநிதி துணைமுதலமைச்சர் ஆகலாம், எதிர்க்கட்சி தலைவர் ஆகலாம், ஆனால் அதே விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்தவர் அறநிலையத்துறையின் குழுவில் இடம்பெற கூடாது.. என்னங்கப்பா நியாயம்.. அர்ச்சனா கல்பாத்தி ஒரு தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி சிங்கப்பூரில் நிர்வாக திறமை குறித்த படிப்பு படித்தவர்.. அவர் தயாரித்த எந்த படமாவது தோல்வி அடைஞ்சிருக்கா.. விஜய்க்கு பிடித்தவர் என்று பாராமல் அவருடைய திறமையை மட்டும் பாருங்கப்பா…

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட புதிய மாநிலக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இத்தகைய நியமனங்களை மையமாகக் கொண்டு சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் பலரும் பலவிதமான விமர்சனங்களையும் கேலிகளையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஆதரவு தரப்பினர் தரப்பிலிருந்து தக்க பதில்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த கால திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை ஆதரித்துப் பேசினார் என்ற காரணத்திற்காகவே தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான குழுக்களில் நியமிக்கப்பட்டனர் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

கோயில் என்பது வெறும் ஆன்மிகத்தை வளர்க்கும் ஒரு ஆன்மிகத் தளம் மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான ரூபாய் நிதிகளைக் கையாளுதல், பெரிய அளவிலான நிறுவனங்களை நிர்வகித்தல் மற்றும் பொதுப்பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுதல் போன்ற நிர்வாகத் திறமைகள் தேவைக் படும் ஒரு முக்கியமான இடமாகும் என்று வாதிடப்படுகிறது.

இந்த வகையில் பார்த்தால், சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் (Singapore Management University) வெல்த் மேனேஜ்மென்ட் (Wealth Management) எனப்படும் செல்வ மேலாண்மைப் படிப்பை முடித்த அர்ச்சனா கல்பாத்தி, ஏஜிஎஸ் நிறுவனத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருவதை எவரும் மறுக்க முடியாது. இதுவரை அவர்கள் தயாரித்த திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளமை அவர்களின் முறையான நிர்வாகத் திறமைக்குச் சான்றாக அமைகிறது.

இத்தகைய சிறந்த கல்வித் தகுதியும், கார்ப்பரேட் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தும் நிர்வாக அனுபவமும் கொண்ட ஒருவரை இந்து சமய அறநிலையத்துறை தனது பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்ற நியாயமான கேள்வியும் இதன் மூலம் எழுப்பப்படுகிறது.

விஜய் நடித்த படங்களைத் தயாரித்தார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அவரைத் திறமையற்றவர் என்று முத்திரை குத்துவது முறையல்ல. அதே விஜய் நடித்த ‘குருவி’ போன்ற படங்களைத் தயாரித்தவர்தான் கடந்த ஆட்சியில் துணை முதலமைச்சராகவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது ன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Leave a Comment