எக்சிட்போல் முடிவுகளுக்கு பின் ரூ.10,000 கோடி.. தேர்தலுக்கு பின் ஏன் பணம் கொடுத்து எக்சிட்போல் உருவாக்கப்படுகிறது.. இதனால் அரசியல் கட்சிகளுக்கு என்ன லாபம்? அங்கே தான் வருகிறது ரூ.10,000 கோடி.. ஆச்சரிய தகவல் இல்லை இது திடுக்கிடும் தகவல்..!

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தேர்தல் உத்திருப்பாளர் ஒருவர் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, இந்த எக்சிட் போல்களுக்கு பின்னால் மிகப்பெரிய அளவில் சூதாட்டத் தாதாக்கள் அல்லது ‘புக்கீஸ்’ செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இதுவரை சுமார் ஒன்பது முதலமைச்சர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட அந்த நிபுணர், கட்சிகள் ஏன் எக்சிட் போல்களை தங்களுக்குச் சாதகமாக மாற்ற முயல்கின்றன என்பதன் பின்னணியில் இருக்கும் பொருளாதார லாபங்களை விவரித்துள்ளார்.

தற்போது தமிழக தேர்தல் தொடர்பாக மட்டும் கள்ளச்சந்தையில் நடைபெற்று வரும் சூதாட்டத்தின் மதிப்பு சுமார் 10,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய தொகையை மையமாக வைத்தே பல எக்சிட் போல்கள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றன. பொதுவாக, ஒரு தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்துவிட்டால், சூதாட்டம் நடத்துபவர்களால் லாபம் ஈட்ட முடியாது. எனவே, சூதாட்ட தாதாக்கள் திட்டமிட்டு தோற்கக்கூடிய கட்சிகளை வெற்றிபெற போவதாக சித்தரிப்பதன் மூலம், மக்களை அந்த தரப்பில் பணத்தை கட்ட வைத்து, இறுதியில் அவர்களை பணத்தை இழக்க செய்கின்றனர்.

இந்த சூதாட்ட தாதாக்களுக்கு ஊடக துறையில் இருக்கும் செல்வாக்கு மற்றும் லாபி மூலம், செயற்கையான எக்சிட் போல்களை உருவாக்கி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புகின்றனர். உண்மையான கள நிலவரத்திற்கு மாறாக, ஒரு குறிப்பிட்ட கட்சி முன்னிலையில் இருப்பதாக காட்டுவதன் மூலம், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை தங்களுக்குச் சாதகமாக வளைக்கின்றனர். இது முழுக்க முழுக்க பணத்தை பறிப்பதற்காகச் செய்யப்படும் ஒரு திட்டமிட்ட மோசடி என்று அந்த ஹைதராபாத் உத்திருப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தேர்தல் சூதாட்டம் குறித்த மற்றொரு அதிரடியான தகவல் என்னவென்றால், தமிழகத்தை பொறுத்தவரை இந்த பெட்டிங் தொழிலின் மையப்புள்ளியாக திருப்பூர் விளங்கி வருகிறது. சத்தமே இல்லாமல் திருப்பூரில் பல சூதாட்ட நிறுவனங்கள் மற்றும் ஏராளமான புக்கீஸ்கள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் தேர்தல் முடிவுகளை வைத்து நடத்தப்படும் இந்த நிழல் உலக பொருளாதாரத்தின் தலைமையகமாக திருப்பூர் உருவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தற்போது ஊடகங்களில் வெளியாகும் எக்சிட் போல்களை அப்படியே நம்பாமல், அதன் பின்னணியில் இருக்கும் இத்தகைய சூதாட்ட தாதாக்களின் சதி திட்டங்களை மக்கள் உணர வேண்டும். தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை பொறுமையாக இருப்பதே சிறந்தது. ஒரு நாட்டின் ஜனநாயக கடமையான தேர்தலை வைத்து, பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டத் துடிக்கும் இந்த நிழல் உலக கும்பலின் வலையில் சிக்காமல் இருப்பது பொது மக்களின் விழிப்புணர்விலேயே உள்ளது.

Leave a Comment