இதுவரை வெளிவராத வித்தியாசமான கருத்துக்கணிப்பு.. அதிமுக, தவெக ஒரே எண்ணிக்கையில் வெற்றி? அதிமுக 80.. தவெக 80.. திமுக 70.. மற்றவை 4.. விஜய்-ஈபிஎஸ் சேர்ந்து ஆட்சி அமைப்பார்களா? யார் முதல்வர்? இப்படி ஒரு அதிசயம் தமிழ்நாட்டில் நடக்குமா?

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை சந்தித்திராத ஒரு விசித்திரமான சூழலை சில கருத்துக்கணிப்பு முடிவுகள் கோடிட்டு காட்டுகின்றன. அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய இரு கட்சிகளும் தலா 80 இடங்களை பெற்று சமநிலையில் வெற்றி பெறும் என்றும், ஆளும் கட்சியான திமுக 70 இடங்களுடன் பின்னடைவை சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

திராவிடப் பாரம்பரியம் கொண்ட அதிமுகவும், மாற்றத்தை முன்மொழியும் தவெகவும் ஒரே அளவிலான பலத்தை பெற்றிருப்பது, தமிழக வாக்காளர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்வதையே காட்டுகிறது.

இத்தகைய சம பலம் கொண்ட தேர்தல் முடிவுகள் வெளியானால், தமிழகத்தில் ஒரு ‘கூட்டணி ஆட்சி’ அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும். அதிமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முன்வருமா என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு. கொள்கை ரீதியாக இவ்விரு கட்சிகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தாலும், ஆளும் திமுகவை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இவை கைகோர்க்க வாய்ப்புள்ளது.

இருப்பினும் இந்த கூட்டணியில் ‘யார் முதல்வர்?’ என்பதுதான் தீர்க்க முடியாத ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுக்கும். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் முதல்வராக விரும்புவார். அதே சமயம், அரசியலில் புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ள விஜய், தனது முதல் தேர்தலிலேயே முதல்வர் பதவி பக்கத்தில் நெருங்கியதை விட்டுக்கொடுக்க தயங்குவார்.

தமிழகத்தை பொறுத்தவரை இது போன்ற ஒரு அரசியல் அதிசயம் இதுவரை நடந்ததில்லை என்றாலும், இந்த முறை நடக்க வாய்ப்பு உள்ளது. விஜய் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கவர்னர் ஆட்சி அதன்பின் மறுதேர்தல் மட்டுமே ஒரே வழி..

Leave a Comment