பொய் பொய் பொய், பொய்யை தவிர வேறு எதுவுமில்லை.. நூல் கொள்முதல் முதல் பணம் பட்டுவாடா வரை ஆதாரங்கள் வெளியானவுடன் ஜூன் மாதம் வெளியான விஜய் புத்தகம் எப்படி நூலகத்திற்கு வந்தது என இன்னொரு பொய்.. எந்த நூலகத்திற்கு வந்தது ? ஆர்டர் காப்பி எங்கே என கேட்டால் அமைதியோ அமைதி..

பொய் பொய் பொய், பொய்யை தவிர வேறு எதுவுமில்லை.. நூல் கொள்முதல் முதல் பணம் பட்டுவாடா வரை ஆதாரங்கள் வெளியானவுடன் ஜூன் மாதம் வெளியான விஜய் புத்தகம் எப்படி நூலகத்திற்கு வந்தது என இன்னொரு பொய்.. எந்த நூலகத்திற்கு வந்தது ? ஆர்டர் காப்பி எங்கே என கேட்டால் அமைதியோ அமைதி.. இப்படி பொய் சொல்லிகிட்டே இருந்தால் ஒருநாள் நிஜமாவே நீங்க உண்மையை சொன்னாக்கூட மக்கள் நம்ப மாட்டாங்க… ஏன்னா இது ‘புலி வருது ‘கதை மாதிரி தான்…

ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்” என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழ்நாட்டின் பொது நூலகங்களில் நடைபெற்ற தரமற்ற AI புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சியான திமுக அடுக்கடுக்காக பொய்களை சொல்லித் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டு வருகிறது. நாம் தவறே செய்யாத போது ஒருத்தர் நம்மீது தவறான குற்றச்சாட்டைச் சுமத்தினால், அந்தச் சாட்டு பொய் என்று ஆதாரத்துடன் உண்மையை எடுத்துச் சொல்வதே இயல்பு. ஆனால் தவறு செய்தவனோ, தான் செய்த தவறையும் ஊழலையும் மறைக்க மேலும் பல பொய்களை அவிழ்த்து விடுவான். அதைத்தான் தமிழகத்தில் AI புத்தக முறைகேடு வெளிச்சத்திற்கு வந்த நாள் முதலாக திமுகவினர் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் பொது நூலகங்களுக்கு போலி ஆசிரியர்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக எழுதப்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்ட குற்றச்சாட்டு எழுந்தவுடன், திமுகவினர் அதைத் தவெக ஆட்சியின் மீது பழிபோட முயன்றனர். ஆனால், புத்தகக் கொள்முதல் ஆணைகளும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்ட அரசு உத்தரவுகளும் முழுமையாகத் திமுக ஆட்சிக் காலத்திலேயே பிறப்பிக்கப்பட்டன என்பதை அரசாணை ஆதாரங்களுடன் தவெக அரசின் துறை சார்ந்த அமைச்சர் தெளிவுபடுத்தி திமுகவின் முதல் பொய்யை உடைத்தார்.

அதன் பின்னர், திரிஷா விஜய் மற்றும் பல விஜய் பெயர்களில் போலி புத்தகங்கள் இருப்பதால் இது தவெகவின் சதி என்று அடுத்த கதையைக் கட்டினார்கள். ஆனால், கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் பெயர்களிலேயே நூற்றுக்கணக்கான போலி புத்தகங்கள் நூலகங்களில் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானதும் திமுகவினர் வாயடைத்துப் போனார்கள். அடுத்து, ஜூன் மாதத்தில்தான் நூலகப் புத்தகங்களில் சீல் போடப்பட்டுள்ளது, எனவே இது தவெக ஆட்சியில் வாங்கப்பட்டதே எனப் புதுப் புரளியைக் கிளப்பினார்கள். அதற்குப் பதிலளித்த அமைச்சர், புத்தகக் கொள்முதல் அனைத்துமே தேர்தலுக்கு முன்பே திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டு விட்டது என்றும், புதிய ஆட்சி அமைந்த பிறகு நூலகங்களைத் திறப்பதற்காகப் புத்தகங்களைப் பிரித்துச் சீல் வைக்கும் வழக்கமான பணிகள் மட்டுமே ஜூன் மாதத்தில் நடைபெற்றன என்றும் விளக்கமளித்தார்.

மேலும், இந்தச் சர்ச்சைக்குரிய அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளரே நேரடியாகத் தொலைக்காட்சியில் தோன்றி, தான் விற்ற அனைத்துப் புத்தகங்களும் திமுக ஆட்சிக் காலத்திலேயே கொள்முதல் செய்யப்பட்டுப் பணம் பெறப்பட்டது என்றும், தவெக ஆட்சியில் எந்தவொரு புத்தகத்தையும் தான் விற்கவில்லை என்றும் உண்மையை உடைத்து திமுகவின் சாயம் முழுவதையும் வெளுத்தார். இதையெல்லாம் மறைக்க திமுகவினர் கடைசியாக, ஜூன் மாதம் சந்தைக்கு வந்த விஜய் குறித்த புத்தகத்தின் அட்டையைப் படம் எடுத்துப் போட்டு, அது எப்படி திமுக ஆட்சியில் வாங்கப்பட்டிருக்க முடியும் என்று திசைதிருப்பப் பார்த்தார்கள். ஆனால், தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு வெளியிட்ட உண்மைச் சரிபார்ப்பில், அந்தப் புத்தகம் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு அல்லது எந்தவொரு அரசு நூலகத்திற்கும் கொள்முதல் செய்யப்படவே இல்லை என்பது அம்பலமானது.

பொய்களுக்குப் பஞ்சம் ஏற்படும் அளவுக்கு திமுகவினர் அடுக்கடுக்காகப் பொய்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் சொல்வது பொய் என்பது அடுத்த சில மணி நேரத்திலேயே ஆதாரப்பூர்வமாக வெளிவந்து விடுகிறது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவுக்கு, அரசாங்கத்தின் செயல்பாடுகளை நேர்மையாகத் தட்டிக் கேட்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், தங்களின் பழைய ஊழல்களை மறைக்க இவ்வாறாகத் தொடர்ந்து பொய்களைச் சொல்லி அம்பலப்பட்டுக்கொண்டே இருந்தால், எதிர்காலத்தில் அவர்கள் ஏதேனும் உண்மையான பிரச்சினையைப் பேசினால் கூட மக்கள் அதை நம்பமாட்டார்கள்; கடைசியில் ‘புலி வருது புலி வருது’ கதையாகவே அது முடியும்.

எனவே, கட்சியில் யார் தனது பேச்சைக் கேட்காவிட்டாலும், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தங்களது கட்சியினர் கையில் காலில் விழுந்தாவது அவர்களைப் பொய் பேசுவதை நிறுத்தச் சொல்லி, உண்மை பேசி அரசியல் செய்ய வைக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கிய பழைய அரசியல் அமைப்புகளுக்கு மாற்றாக, முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் இயங்கும் தவெக அரசு வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்று வருகிறது.

Leave a Comment