இடைத்தேர்தலுக்குள் புதிய தலைமை செயலகம் ரத்து என்ற அறிவிப்பை வெளியிட தவெக அரசு திட்டமா? மீனவர்களுக்கு எதிரான அரசு அல்ல என்ற இமேஜை ஏற்படுத்த திட்டம்? மீனவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பவன் இந்த விஜய் என்ற பிராண்டை உருவாக்கும் ஸ்ட்ராட்டஜி..

இடைத்தேர்தலுக்குள் புதிய தலைமை செயலகம் ரத்து என்ற அறிவிப்பை வெளியிட தவெக அரசு திட்டமா? மீனவர்களுக்கு எதிரான அரசு அல்ல என்ற இமேஜை ஏற்படுத்த திட்டம்? மீனவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பவன் இந்த விஜய் என்ற பிராண்டை உருவாக்கும் ஸ்ட்ராட்டஜி.. மக்களின் முடிவுக்கு கட்டுப்படுபவர் நமது முதல்வர் என மக்களையே பேச வைக்கும் திட்டமா? எங்களுக்கும் அரசியல் தெரியும் என நிரூபித்த தவெக.. புதிய தலைமை செயலகம் அமைக்கும் ஐடியாவே விஜய்யிடம் இல்லையாம்.. இல்லாத ஒன்றை இருப்பது போல் உருவாக்கி, பின் மீனவ நண்பன் என பெயரெடுக்க இந்த அறிவிப்பு.. மொத்தத்தில் ஒரு அரசியல் ராஜதந்திரி என்பதை நிரூபித்துவிட்டாரா?

 

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக் வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள சலசலப்புகளும் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சமும், அதற்கு எதிராக மீனவ கிராமங்கள் ஒருங்கிணைந்து விடுத்த எச்சரிக்கைகளும் ஆளுங்கட்சியான தவெக மீது திடீர் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எப்படிப்பட்ட நகர்வுகளை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் அதிகரித்துள்ளது. அரசியல் ரீதியாக இது ஒரு திட்டமிடப்பட்ட வியூகமா அல்லது எதிர்பாராத திருப்பமா என்ற கோணத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

ஆரம்பத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியானதும், மீனவ சமுதாயத்திடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. பட்டினப்பாக்கம், முட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் ஒன்று திரண்டு, தங்கள் வாழ்வாதாரம் சிதைந்துவிடும் என்று கண்டனங்களைப் பதிவு செய்தனர். குறிப்பாக, செப்டம்பர் 21-க்குள் இந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அவர்கள் கெடு விதித்ததும், எதிர்க்கட்சிகள் இதனைப் பெரிதும் கையில் எடுத்ததும் அரசுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இதுதொடர்பாகத் தவெக தரப்பில் சில அமைச்சர்கள் இது ஆரம்ப கட்ட ஆய்வு மட்டுமே என்று விளக்கம் அளித்து வந்தாலும், பொதுமக்களின் மத்தியில் எழுந்துள்ள சலசலப்பு அடங்கவில்லை.

இந்தச் சூழலில்தான், முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் ஒரு மாஸ்டர் பிளான் மூலம் என்ட்ரி கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, மீனவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவர்களின் நலனைக் காப்பதற்காகப் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவிக்க அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், ‘நாங்கள் மீனவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல; மக்களின் குரலுக்கு எப்போதும் மதிப்பளிப்பவன் இந்த விஜய்’ என்ற அசைக்க முடியாத நற்பெயரைச் சமுதாயத்தில் உருவாக்கச் தவெக மேலிடம் காய் நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் இப்படியொரு திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு, மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு அதனைத் தாங்களே முன்வந்து ரத்து செய்வது என்பது ஒரு அசல் அரசியல் தந்திரமாகும். “மக்களின் முடிவுக்குக் கட்டுப்படும் ஜனநாயக முதல்வர்” என்ற பிம்பத்தை இதன் மூலமாக மக்கள் மனதில் ஆழமாகப் பதித்துவிட முடியும். எதிர்க்கட்சிகள் தங்களை விமர்சிப்பதற்கு முன்பாகவே, தானே முன்வந்து அந்தத் திட்டத்தைக் கைவிடுவதன் மூலம் ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தின் முழு ஆதரவையும் தவெக தன் பக்கம் திருப்ப முடியும். இது வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இணையதளங்களிலும் களத்திலும் விர்ச்சுவல் வாரியர்ஸின் தீவிர ஆதரவோடு கட்டமைக்கப்படும் இந்த அரசியல் வியூகம், தவெக வெறும் சினிமா கவர்ச்சியால் மட்டும் வெற்றி பெற்ற கட்சி அல்ல, மாறாக ராஜதந்திரம் நிறைந்த பக்கா அரசியல் கட்சி என்பதை நிருபிப்பதாக அமைந்துள்ளது. இல்லாத ஒன்றை விவாதப் பொருளாக்கி, பின்னர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தந்து அதனை வாபஸ் பெறுவது மூலம் ஒரு ஹீரோவான தலைவர் என்ற இமேஜ் மேலும் வலுவடைகிறது. மொத்தத்தில், இந்தச் செயலக விவகாரத்தை மிகச்சரியாகக் கையாண்டு, தன்னை ஒரு அசல் அரசியல் சாணக்கியர் என்பதை முதல்வர் விஜய் மீண்டும் நிரூபிக்கக் காத்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.

Leave a Comment