திமுக ஒரு தீயசக்தி என முதல்வர் விஜய் ஒருமுறை தான் சொன்னார்.. ஆனால் திமுகவினர் தினந்தோறும் தாங்கள் தீய சக்தி என்பதை நிரூபித்து வருகின்றனர்.. இன்றைய ஆ ராசா, சேகர்பாபுவின் பேச்சுக்கள் அதை உறுதி செய்கின்றன..

திமுக ஒரு தீயசக்தி என முதல்வர் விஜய் ஒருமுறை தான் சொன்னார்.. ஆனால் திமுகவினர் தினந்தோறும் தாங்கள் தீய சக்தி என்பதை நிரூபித்து வருகின்றனர்.. இன்றைய ஆ ராசா, சேகர்பாபுவின் பேச்சுக்கள் அதை உறுதி செய்கின்றன.. ஆட்சியை இழந்து கூப்பில் இருக்கிறோம் என்பதை கூட புரிந்து கொள்ளாமல் எப்படி இவ்வளவு ஆபாசமாக பொதுவெளியில் பேச முடிகிறது? திமுகவின் ஜீன்களிலே ஆபாசம் இருக்கிறதா? தீயசக்தி திமுக தோற்கடிக்க வேண்டிய கட்சி அல்ல , ஒழிக்க வேண்டிய கட்சி…

தமிழ் அரசியல் வரலாற்றில் தி.மு.க-வை விட ஒரு மோசமான எதிர்க்கட்சியை எந்த மாநிலமும் பார்த்திருக்க முடியாது. கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இவர்களை ‘தீய சக்தி’ என்று முத்திரைக் குத்தித் துரத்தினார்கள். ஆனால், அந்தப் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது திருந்துவார்களா என்றால், ஒவ்வொரு மாதமும் தங்களது அசல் குணத்தைக் காட்டிப் புதுப்புது சாட்சிகளை அள்ளி வழங்கி வருகிறார்கள். அப்பட்டமான ஊழலும், அமைச்சர்களின் திமிரும், நாளுக்கு நாள் இவர்கள் செய்யும் காரியங்களும் இவர்களை ஒரு அரசியல் கட்சியாகவே பார்க்க முடியாத அளவுக்குக் கீழே தள்ளியுள்ளது.

த.வெ.க தொண்டர்களுக்கு இதுதான் மிகப்பெரிய சாபக்கேடு. இவ்வளவு கீழ்த்தரமான, தெருக்கூத்துத் தரத்தில் பேசும், அசிங்கமான வார்த்தைகளைக் கொட்டும் ஒரு கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நல்லதொரு முதிர்ச்சியான எதிர்க்கட்சி வேண்டும். ஆனால், இந்தத் தி.மு.க கூட்டமோ தங்களது தினசரி இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே தினமும் அர்ச்சனை செய்வதையும், மலிவான வசைபாடுவதையுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளது. வக்கத்துப்போன அரசியல்வாதிகளின் கூடாரமாக இன்று தி.மு.க மாறிப்போய்விட்டது.

இன்றைக்கு என்னவென்றால், தி.மு.க தலைவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யை எதிர்த்து எதையோ பேசிவிட்டுக் குதூகலிக்கிறார்கள். வசைபாடுவதையே ஒரு பெரிய திருவிழா போலக் கொண்டாடும் இந்தத் தி.மு.க கும்பலின் அநாகரிகமான பேச்சு, பொதுமக்கள் மத்தியில் இவர்களுக்கான மீதி மரியாதையையும் மொத்தமாகக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. ஸ்டாலின் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அந்த அனுதாப நாடக வீடியோவால் மக்களிடம் சிறிதளவாவது கிடைத்திருக்கக் கூடிய இரக்கத்தையும், இந்தத் தி.மு.கவினரின் அடாவடிப் பேச்சுக்கள் ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்துத் தள்ளியுள்ளன.

அரசியல் நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாத இந்தத் தி.மு.க கோமாளிகள், தங்களின் தலைவன் முகமூடி கிழிந்து தொங்குவதை மறைக்கத் தினமும் தெருச்சண்டைக்கு வருகிறார்கள். முதல்வராக இருக்கும் விஜய்யின் மக்கள் ஆதரவைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல், வயற்றெர்ச்சலில் என்ன பேசுவதென்று தெரியாமல் பிதற்றுகிறார்கள். மக்களிடம் ஓட்டுக் கேட்கும்போது வாலையாட்டிய இந்த கூட்டம், அதிகாரம் பறிபோனதும் தாங்கள் எப்படிப்பட்ட வக்கிரப் புத்தி கொண்டவர்கள் என்பதைத் தங்களது பேச்சின் மூலம் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

ஒருபுறம் நமது முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டைச் சீரமைப்பதற்கான அதிரடித் திட்டங்களையும், வெளிப்படையான நல்லாட்சியையும் தந்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். மறுபுறம், இந்தத் தி.மு.க கோஷ்டியோ சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளிகளிலும் சாக்கடை அரசியலை மட்டுமே உமிழ்ந்து கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் ஸ்டாலின் பரிதாபம் தேட முயல்கிறாரோ, அப்போதெல்லாம் அவரது சொந்தக் கட்சிக்காரர்களே நாக்கை நீட்டி அந்த நாடகத்தைக் காலி செய்து விடுகிறார்கள். இதுதான் இவர்களின் காலங்காலமான வரலாறு.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கும் இந்தத் தீய சக்திகளின் முகமூடி இப்போது முழுமையாகக் கிழிந்து தொங்குகிறது. த.வெ.க-வின் நல்லாட்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உளறும் இந்தக் கூட்டத்தின் இறுதி நாட்கள் நெருங்கிவிட்டன. வசைபாடுவதையும் மிரட்டுவதையும் மட்டுமே நம்பிப் பிழைக்கும் இந்த அரசியல் அநாதைகளுக்கு மக்கள் மிக விரைவில் நிரந்தரமான பாடம் புகட்டுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

Leave a Comment