ஐரோப்பிய மாடல்… ஆப்பிரிக்க மாடல்னு ஊரை ஏமாத்த பக்கம் பக்கமா பில்டப் கொடுத்தீங்களே! கடைசியில உங்க திராவிட மாடலும் காலி, உங்க ‘ஆடலும்’ காலி! 2026க்கு அப்புறம் திராவிட கட்சிகளுக்கு இங்க வேலையே இல்லைன்னு மக்கள் அச்சு அசல் தீர்ப்பு எழுதிட்டாங்கடா! இனிமே தமிழ்நாட்டுல தவெக மட்டும்தான் ‘நம்பர் ஒன்’! அந்த இடத்தை எட்டி பிடிக்க உங்க ரெண்டு பேராலயும் கனவுல கூட நினைக்க முடியாது!

தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பல தசாப்தங்களாக நிலைபெற்றிருந்த இருமுனை திராவிட அரசியல் சாம்ராஜ்யத்தை முற்றிலுமாக அசைத்து பார்த்துள்ளன. “திராவிட மாடல்”, “ஐரோப்பிய மாடல்” என்றெல்லாம் வெற்று பெருமைகளைப் பேசி வந்த திமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அவரது சொந்த தொகுதியிலேயே ஒரு சாதாரண கடைநிலை தொண்டரால் தோற்கடிக்கப்பட்ட வரலாற்று சறுக்கல் தற்போது பொதுவெளியில் மிகக் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத போக்கிற்கும், விளம்பர பிம்பங்களுக்கும் மக்கள் கொடுத்த மரண அடிதான் இந்த தோல்வி என்பதை அரசியல் விமர்சகர்கள் அடுக்கடுக்கான வரலாற்று உதாரணங்களுடன் அப்பட்டமாக அம்பலப்படுத்தி வருகின்றனர்.

திமுகவின் இந்தத் தோல்வியை நியாயப்படுத்துவதற்காக, “1996-இல் ஜெயலலிதா தோற்கவில்லையா, அண்ணாவும் காமராஜரும் கூடத்தான் தங்களின் சொந்த தொகுதிகளில் தோற்று போனார்கள்” என்ற வாதங்களை அக்கட்சியினர் முன்வைக்கின்றனர். ஆனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதாவின் கடுமையானா ஆட்சியை மக்கள் எப்படி தூக்கி எறிந்தார்களோ, அதே போன்றதொரு கொடுங்கோல் மற்றும் ஊழல் மலிந்த ஆட்சியைத் திமுக நடத்தியதால்தான் மக்கள் ஸ்டாலினையும் அதே பாணியில் தோற்கடித்துள்ளனர் என்ற எதார்த்த உண்மையை நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மக்கள் எப்போதும் தங்களை தவறாக வழிநடத்தும் தலைவர்களை தங்களின் வாக்குப்பலத்தால் அடக்க தவறியதே இல்லை என்பதற்கு ஸ்டாலினின் தற்போதைய தோல்வியே சாட்சியாகும்.

ஆப்பிரிக்க மாடல், ஐரோப்பிய மாடல் என்று உலகளாவிய ஒப்பீடுகளை செய்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பே இவர்களை பார்த்துதான் ஆட்சி செய்கிறார் என்பது போன்ற அதீத பொய் பிரச்சாரங்களை திமுகவினர் பரப்பி வந்தனர். ஆனால், களத்தில் மக்கள் பசி, வேலையின்மை, மின்கட்டண உயர்வு, மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றால் அவதிப்பட்டு கொண்டிருந்தபோது, இத்தகைய வெற்று பெருமைகளை பேசியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்தது. உலக மாடல்களை பற்றிப் பேசியவர்கள், தங்களின் சொந்தத் தொகுதியில் உள்ள சாமானிய மக்களின் மனநிலையைக்கணிக்கத் தவறியதன் விளைவாக, இன்று ஒட்டுமொத்த தமிழகத்தாலும் நிராகரிக்கப்பட்டு வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய தேர்தல் தீர்ப்பின் மூலம் தமிழக மக்கள் தங்களின் தெளிவான முடிவை மிக ஆணித்தரமாக பதிவு செய்துள்ளனர். 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில் திராவிட கட்சிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இரு பெரும் இயக்கங்களையும் மக்கள் முற்றிலுமாக புறந்தள்ளி, வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். தமிழ்நாட்டின் புதிய விடிவெள்ளியாகவும், மக்களின் பேராதரவை பெற்ற முதன்மை தலைவராகவும் முதலமைச்சர் விஜய் உருவெடுத்துள்ளார் என்பதுதான் இன்றைய நிதர்சனமான அரசியல் உண்மை. இது வெறும் ஒரு கட்சியின் வெற்றி அல்ல; பல ஆண்டுகால அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தங்களின் கைகளில் எடுத்த மாபெரும் ஜனநாயகப் புரட்சியாகும்.

இன்றைய அரசியல் சூழலில் தவெக-வின் அசுர வேக எழுச்சியை கண்டு, தங்களின் அரசியல் எதிர்காலத்தை நினைத்து அதிமுக போன்ற கட்சிகள் தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ளக் கடுமையாகப் போராடி வருகின்றன. அதே நேரத்தில், தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத திமுகவில், அடுத்தடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்குள் மிகப்பெரிய உட்கட்சி பூசல்களும், அதிகார பிரிவினைகளும் வெடிக்க போவது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். தலைமை மீது அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள் தவெக அரசை நோக்கித் தடம் மாறத் தயாராகி வருவதால், திமுக ஒரு மிகப்பெரிய பூகம்பத்தைச் சந்திக்கக் காத்திருக்கிறது.

முடிவாக பார்க்கும்போது, தமிழகத்தில் இனிமேல் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையை மக்கள் தங்களின் தீர்ப்பின் மூலம் நிலைநிறுத்தியுள்ளனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, மக்களின் தேவைகளை உணர்ந்து களத்தில் இறங்கி ஆக்கப்பூர்வமாக வேலை செய்து வருவதால், தவெக-வே தமிழகத்தின் நிரந்தரமான நம்பர் ஒன் சக்தியாக மாறியுள்ளது. தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடும் பழைய கட்சிகளின் சலசலப்புகளுக்கு அஞ்சாமல், தூய்மையான மற்றும் லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகத்தை நோக்கித் தமிழகம் தற்போது கம்பீரமாக நடைபோட்டு வருகிறது.

Leave a Comment