கஷ்டப்பட்டு திராவிட கட்சியினர் செய்யும் நேரேட்டிவ்களை ஒரே ஒரு ட்வீட் மூலம் தவிடுபொடி ஆக்கும் ஜான் ஆரோக்கியசாமி.. ட்வீட் போட்டு சில நிமிடங்களில் டெலிட் செய்வதிலும் ஒரு ட்விஸ்ட்.. ஒரு பைசா செலவில்லாமல் பெய்டு விமர்சகர்களை கதற வைக்கிறாரா?

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி அவர்கள், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
பொதுவாக ஊடக வெளிச்சம் படாதவாறு பின்னணியில் இருந்து செயல்படும் அவர், தேர்தல் சமயத்தில் வெளியிட்ட சில பதிவுகளும், அதனை தொடர்ந்து அவர் செய்த சில மாற்றங்களும் ஆளுங்கட்சியான திமுக-வை நிலைதடுமாற செய்துள்ளன.

தேர்தல் முடிவுகள் குறித்து ஜூனியர் விகடன் போன்ற இதழ்கள் வெளியிட்ட கணிப்புகளை விமர்சிக்கும் வகையில், இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல, இது ஒரு ‘சுனாமி தேர்தல்’ என்று அவர் தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன் பதிவிட்டது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர் சொன்னபடியே தேர்தல் நாளன்று மக்கள் காட்டிய ஆர்வம், தவெக-விற்கு சாதகமான ஒரு மௌன புரட்சி நடந்திருப்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், ஜான் ஆரோக்கியசாமி அவர்கள் வெளியிட்ட சில மறைமுகமான பதிவுகள் Decode செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 2026-ல் விஜய் அண்ணா வெற்றி பெறுவார் என்பதை உணர்த்தும் வகையில், 1967-ல் அண்ணா, 1977-ல் எம்ஜிஆர் மற்றும் 1983-ல் என்டிஆர் ஆகியோரின் வெற்றிகளை வரிசைப்படுத்தி அவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவு நேரிடையாக இல்லாமல் முதல் எழுத்துக்களை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அதாவது 1967-ல் A, 1977-ல் M மற்றும் 1983-ல் N என குறிப்பிடப்பட்டிருந்தது. தேவையற்ற விவாதங்களை தவிர்த்து தொண்டர்களை சரியான இலக்கை நோக்கி சிந்திக்க வைக்கும் ஒரு உத்தியாக பார்க்கப்படுகிறது. இத்தகைய பதிவுகள் மூலம் தவெக-விற்கு எதிராக சில ஊடகங்கள் கட்டமைக்கும் பொய்ப் பிரச்சாரங்களை அவர் மிக எளிதாக முறியடித்து வருகிறார்.

ஜான் ஆரோக்கியசாமி அவர்கள் ஒரு பதிவை இட்டு, அதனைச் சிறிது நேரத்திலேயே நீக்குவது என்பது தற்செயலானது அல்ல, அது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வு என்று கூறப்படுகிறது. ஒரு பாசிட்டிவான செய்தியை பதிவிட்டு அதனை நீக்கும்போது, எதிர்தரப்பினர் ஏன் நீக்கினார் என்ற விவாதத்தை தொடங்குவார்கள்; இதன் மூலம் அந்த செய்தி இன்னும் வேகமாக பரவும் என்பது அவரது கணக்காக இருக்கிறது.

விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் அவர்கள் சொன்ன ‘தலையாங்கத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ கதையை குறிப்பிடும் வகையில் அவர் இட்ட பதிவும் இத்தகைய விவாதத்தையே ஏற்படுத்தியது. ஒரு சிறுவன் எப்படி ஏழு மன்னர்களை வீழ்த்தினானோ, அதேபோல் விஜய் அவர்கள் தமிழக அரசியலில் ஒரு புதிய சரித்திரத்தை படைப்பார் என்பதை இந்த பதிவு மறைமுகமாக உணர்த்துகிறது.

திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் தவெகவிற்கு எதிராக செட் செய்யும் ‘நரேட்டிவ்’ எனப்படும் கருத்துருவாக்கங்களை ஜான் ஆரோக்கியசாமி தனது ஒற்றைத் தளம் மூலமாக சிதறடித்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலிலும், ஜான் ஆரோக்கியசாமியின் ட்வீட்டுகள் உடன்பிறப்புகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. தவெக தொண்டர்கள் குழப்பமடையாமல் இருக்கவும், அதே சமயம் எதிரிகளின் கவனத்தை திசைதிருப்பவும் அவர் கையாளும் இந்த ‘மறைந்து விளையாடும்’ கலை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து கட்டமைக்கப்படும் அரசியல் பிம்பங்களை, ஒரு சிறு பதிவின் மூலம் உடைக்கும் அவரது திறமை வியக்கத்தக்கது.

இறுதியாக, ஜான் ஆரோக்கியசாமியின் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தவெக தலைவர் விஜய் அவர்களின் முழு ஒப்புதலோடுதான் நடைபெறுகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை, தொண்டர்கள் எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் கொடுக்காமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே இத்தகைய பதிவுகளின் மைய நோக்கமாகும். எதிராளிகள் அவரது பதிவுகளை நீக்குவதை பலவீனமாக கருதினாலும், அதுவே அவர்களின் கருத்து போரை தடுக்கும் ஒரு கேடயமாக மாறியுள்ளது. தமிழக அரசியலில் நிலவும் அறியாமையை அகற்றி, ஒரு தெளிவான அரசியல் பாதையை நோக்கித் தவெக பயணிக்கிறது என்பதற்கு ஜான் ஆரோக்கியசாமியின் இந்த வியூகங்களே சாட்சியாக உள்ளன.

Leave a Comment