தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு பண்பாடு, அது ஒரு நாகரிகம், அது ஒரு சிந்தனை, அது ஒரு அன்பு, தமிழ்னா விருந்தோம்பல்

தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு பண்பாடு, அது ஒரு நாகரிகம், அது ஒரு சிந்தனை, அது ஒரு அன்பு, தமிழ்னா விருந்தோம்பல், சுருக்கமா சொன்னா தமிழ்னா கெத்து, தமிழ்னா பவர்.. அந்த தமிழோட புகழ சொல்ற தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடனும்.. முதல்வர் விஜய் கொண்டு வ்ந்த தீர்மானம்… ஒருமனதாக நிறைவேற்றம்.. முதல்வர் விஜய்யின் முழு பேச்சு விவரங்கள்…

மான்புமிகு பேரவை தலைவர் அவர்களே மொழி எப்பவும் தொடர்புக்கான ஒன்னுதான் இல்லைன்னு யாரும் மறுக்கவே முடியாது. உலகத்தில இருக்க எல்லா மொழிக்கும் இது பொருந்தும் அதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனா நம்ம தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல பேசினா வர்ற ஓசை மட்டுமல்ல திரும்பவும் சொல்றேன் தமிழ் ஒரு மொழி மட்டுமில்ல அது நம்ம உயிர் அது நம்ம உணர்வு.

நம்மள நம்மள பெத்த தாயை அம்மான்னு சொல்றப்ப எல்லாம் பாசமும் சொந்தமும் நம்மள அறியாமலே உயிரா உறவா உணர்வா தானா உள்ளுக்குள்ள தோணும்ல்ல அதே மாதிரி ஏன் இன்னும் ஒரு படி மேல போயே சொல்லலாம் தமிழ்னு சொன்னாலே எப்படி இருக்கும் என்ன ஆகும்னு சொல்லவா வேணும் தாய் எப்படி ஒரு மிகப்பெரிய புனிதமோ அப்படிதாங்க தாய் மொழியும் அதிலையும் அதிலையும் நம்ம தாய்மொழி தமிழ் மொழி இப்படி சொல்றதே போதும் எல்லாருக்கும் நம்ம தாய்மொழி உணர்வை பற்றி புரியும்னு நினைக்கிறோம்.

நம்ம தாயே நமக்கு மிகப்பெரிய புனிதம்னா நம்ம எல்லாருக்குமான தமிழ் தாய் பற்றி சொல்லவா வேணும் தாயை போற்றுகிற வாழ்த்துகிற தமிழ்நாட்டு மண் தமிழ் தாய் வாழ்த்து எப்படி விட்டறோம் விடாது விடவும் மாட்டோம். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே நம்ம தமிழ் தாய் வாழ்த்த 1891ல் எழுதின மனோன்மணியம் சுந்தரனார் நம்ம தமிழ் மொழியவே தமிழ் தாய்னு சொல்லி உயர்வா பாடினார் இந்திய துணைகண்டத்தை இந்திய ஒன்றியத்தை அழகிய முகமா சொன்ன மனோன்மணியம் சுந்தரனார் அந்த முகத்தோட நெத்தியில வைக்கிற பொட்டுதான் திலகம் தான் தமிழ் நாடுன்னு சொன்னாரு.

இந்தியாவோட நெற்றியில இந்தியாவோட நெற்றியில இருக்கிற பொட்டு மாதிரி ஒரு வெற்றி பொட்டுதான் நம்ம தமிழ்நாடு அந்த பொட்டோட நறுமணம் உலகம் பூரா பரவுற மாதிரி தமிழோட தமிழோட புகழும் உலகம் பூரா பரவணும்னு சொன்னார் உண்மைதானே அது இன்னைக்கு தமிழ் பேசுற மக்கள் இல்லாத நாடுகளே ரொம்ப குறைவுதானே தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது திரும்பவும் சொல்லலாம் தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒரு பண்பாடு அது ஒரு நாகரிகம் அது அது ஒரு சிந்தனை அது ஒரு அன்பு தமிழ்னா விருந்தோம்பல் சுருக்கமா சொன்னா தமிழ்னா கெத்து தமிழ்னா பவர் அந்த தமிழோட புகழ சொல்ற தமிழ் தாய் வாழ்த்துல அனைத்து உலகமும் இன்பமுறைன்னு சொல்லி உலகத்தையே நம்ம தமிழ உயர்த்தி பிடிக்குதே தவிர எந்த மொழியையும் எந்த மதத்தையும் எந்த இனத்தையும் ஏன் எந்த ஒரு தனி மனுஷனை கூட தாழ்த்தி பேசல யாரையும் கொஞ்சம் கூட காயப்படுத்தல.

நம்ம ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா ஒரு பேர் இருக்கும். ஒரு கூட்டத்தில நம்ம பேரை சொல்லி யாரும் கூப்பிட்டா நாம ஒருத்தர் மட்டும் தான் திரும்பி பார்ப்போம். ஆனா தமிழ் தமிழ்ன்னு சொன்னா ஒட்டுமொத்தமா நாம எல்லாருமே திரும்பி பார்ப்போம்ல்ல. அப்படி நம்ம எல்லாருக்கும் இருக்கிற பொது பேருதானே அது நமக்கு தமிழ்னு அடையாளத்தை கொடுத்ததே தமிழ்தானே ஒரு பேரே ஒரு சொல்லே ஒரு மிகப்பெரிய வரலாறுனா அது நம்ம தமிழ்தான் அந்த தமிழை உயர்த்தி பிடிக்கிற தமிழை பின்னாடி தள்னா தமிழ்நாடு எப்படி பொறுத்திருக்கும்.

ஒரு கட்சிக்கு பிரச்சனைனா சம்பந்தப்பட்ட அந்த கட்சி மட்டும்தான் போராடும் ஆனால் தமிழ்ன்னு சொன்னா ஒட்டுமொத்த தமிழ் நாடும் ஒன்னா வந்து நிற்கும் அதனாலதான் சொல்றோம் தமிழ்னா உயிர் தமிழ்னா உணர்வு உலகத்தில தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில மறைஞ்சு போய் இருக்குன்னு சொல்லுவாங்க ஆனா நம்ம தமிழ் காலகாலமா நிலைச்சு நீடிச்சு நிக்கிற ஒன்னு தமிழ்ல என்ன இல்லைங்க இலக்கணம் இலக்கியம்னு பலாயிரம் வருஷமா இருக்கிறது நம்ம தாய் மொழிக்கு தானே தொல்காப்பியம் சங்க இலக்கியம் ஏன் உலகம் முழுக்க தெரிஞ்ச திருக்குறள் ஒன்னு போதாதா தமிழோட பெருமையை சொல்றதுக்கு இவ்வளவு பெருமை கொண்ட தமிழ் மொழியோட ஒரு அடையாளம் தான் நம்ம தமிழ் தாய் வாழ்த்து.

ஒட்டுமொத்த இந்தியாவோட பன்முக த்தன்மையை உயர்த்தி பேசுற தமிழ் தாய் வாழ்த்து நம்ம ஊர்ல நம்ம தமிழ்நாட்டில முதல் இடத்தில தான் இருக்கணும். நம்ம இந்திய அரசியல் சாசனமே ஒவ்வொரு மாநிலத்தோட மொழிக்கும் பண்பாட்டுக்கும் பாரம்பரியத்துக்கும் பாதுகாப்பு உரிமையை கொடுத்திருக்கு தானே அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுத்துதானே ஆகணும் அதானே மாநில உரிமை அப்படிப்பட்ட தமிழ் தாய் வாழ்த்துதான் 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்கள்ல முதல்ல பாடணும்னு சொல்லி ஒரு அரசாணையை போட்டு அந்த செயல்பாட்டுக்கு அத செயல்பாட்டுக்கு வந்துச்சு.

அதுக்கப்புறம் 2021 டிசம்பர் 17 முதல் மாநில பாடலா அங்கீகாரம் வழங்கப்பட்டுச்சு அனைத்து கல்வி நிறுவனங்கள் பல்கலை கழகங்கள் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளோட நிகழ்ச்சிகள்ல் தமிழ் தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படணும்னு அரசாணையும் இருக்கு. 2026 ஜனவரி மாசம் 28ஆம் தேதி ஒன்றிய அரசோட கடிதத்தில அரசு விழாக்கள்ல் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில மாநில பாடல் பற்றி எந்த வழிமுறையும் இல்லாமல் இருந்துச்சு. நம் அரசு பொறுப்பேத்ததும் கடந்த மே மாதம் 27ஆம் தேதி மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு மாநில பாடல்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும்னும் ஒன்றிய அரசு வெளியிட்ட ஆணைக்கு திருத்தம் வெளியிடணும்னும் மாநில விழாக்கள்ல தமிழ் தாய் வாழ்த்த முதல்ல பாடுவத்கான உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும்னு சொல்லி கடிதம் எழுதி இருந்தோம்.

அதை தொடர்ந்து போன ஜூலை மாசம் ஒன்பதாம் தேதி கடிதத்தில மாநில பாடல் பாடப்படுவது பத்தி இருந்துச்சு ஆனா நம்ம தமிழ்நாட்டில 1970கள்ல் இருந்து தமிழ் தாய் வாழ்த்து எல்லா அரசு நிகழ்ச்சிகளலையும் கல்வி நிறுவனங்களையும் தமிழ் தாய் வாழ்த்து முதல்ல பாடுறது ஒரு மரபாவே இருக்கு அதுக்கான அரசாணையும் இருக்கு மான்புமிகு பேரவை தலைவர் அவர்களே தமிழ் நமது உயிர் மூச்சு தமிழ் மொழி நமது அடையாளம் தமிழ் பண்பாடு நமது பெருமை அதனால தமிழ் தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தமிழக வெற்றிக்கழக அரசு ஒருபோதும் சமரசம் செய்யவே செய்யாது.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது அரசில் அரசியல் அமைப்பிற்கும் இந்திய ஒற்றுமைக்கும் எதிரானது இல்ல மாறா வேற்றுமையில் ஒற்றுமை ஒற்றுமை என்ற இந்தியாவோட உயர்ந்த கொள்கையை வெளிப்படுத்துறது. மேலும் தமிழ் தாய் வாழ்த்தை முதல்ல பாடணும்னு சொல்றது அரசியல் சம்பந்தமான விவாதமா மாறனும்ங்கிற அவசியமே இல்லை இது தமிழர்களின் பொது அடையாளம். நம்மை வேறுபடுத்துவது அல்ல ஒன்றிணைப்பது மாண்புமிக பேரவை தலைவர் அவர்களே தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும் தமிழின் தொன்மையையும் தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் இந்த உயரிய பணியில் இந்த சட்டமன்ற பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து அனைத்து கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ் தாய் வாழ்த்து கட்டாயமாக முதலில் பாடப்பட வேண்டும் என்று கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் தாய் வாழ்த்து தொடர்பான அரசினர் தீர்மானம் தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும் தமிழர் நாகரிகம் உலகின் மிக பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனார் அவர்களால் 1891ல் எழுதப்பட்ட மனோன்மணியம் என்ற நாடக நூலின் பாயிரத்தில்ிருந்து எடுக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

21 டிசம்பர் 17 முதல் மாநில பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ் தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் 9ஆம் தேதிய கடிதத்தில் மாநில பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970களில்ிருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படுவது மரபு தன்மையாகவும் அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆகவே தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ் தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். அனைத்து கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டிகிறேன். நன்றி வணக்கம்.

Leave a Comment