இந்த வருஷம் சென்னையில மழை பெய்தா ஒரு சொட்டு தண்ணி கூட ரோட்ல நிக்க கூடாது.. 8 அமைச்சர்களை களத்தில் இறக்கிய முதல்வர் விஜய்.. மழை வந்த பின்னாடி ஆய்வு செய்றவங்க நாடக அரசியல்வாதிங்க.. மழை வருவதற்கு முன்னரே ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குறவங்க தான் மக்களோட நண்பர்கள்… 4000 கோடி எங்கே போச்சுன்னு அப்புறம் மெதுவா ஆய்வு செய்யலாம்.. முதல்ல மக்களோட பாதுகாப்பு முக்கியம்.. இதுதான் தவெக அரசின் முதல் வேலை..
த.வெ.க அரசு சென்னை மாநகரின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னையை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து, மொத்தம் 8 அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை, மழைநீர் வடிகால், வெள்ளத்தடுப்பு உள்ளிட்ட பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை நேரடியாகக் கண்காணிப்பதுடன், மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதே இந்த ஏற்பாட்டின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த பணிகளுக்கும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமை வகித்து, சென்னை முழுவதும் நடைபெறும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மண்டலங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் வெள்ள அபாயம் உள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர் மற்றும் மணலிக்கு அமைச்சர் ரமேஷ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளுக்கான பொறுப்பு அமைச்சர் லோகேஷ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் பகுதிகளை அருண்ராஜ் கண்காணிக்க உள்ளார். இந்த பகுதிகளில் சாலைப்பணிகள், மழைநீர் வெளியேற்றம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளுக்கு விஜய் பாலாஜி பொறுப்பேற்கிறார். கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளை டி.கே. பிரபு கவனிக்க உள்ளார். தென்சென்னை பகுதிகளில் ஆலந்தூர் மற்றும் அடையாறு பகுதிகளுக்கு விஜய் பார்த்திபனும், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கு கே.விக்னேஷும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் அமைச்சர்களின் நேரடி கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக, மழைக்காலம் நெருங்கும் நிலையில் இந்த பொறுப்பு நியமனங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கடந்த காலங்களில் கனமழை பெய்யும்போது சாலைகளில் தண்ணீர் தேங்குவது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுவது, போக்குவரத்து முடங்குவது போன்ற பிரச்னைகள் சென்னையில் பெரும் சவாலாக இருந்துள்ளன. எனவே, மழை தொடங்குவதற்கு முன்பே வடிகால் பணிகள், தண்ணீர் வெளியேற்றும் ஏற்பாடுகள், தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை அமைச்சர்கள் ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மழை வந்த பிறகு ஓடுவது அல்ல… மழை வருவதற்கு முன்பே தயாராக இருப்பதுதான் திட்டம்! என்ற அணுகுமுறையுடன் த.வெ.க அரசு செயல்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 8 அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்து, குறைகளை உடனுக்குடன் அரசின் கவனத்துக்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்களின் நீண்டகால அடிப்படை பிரச்னைகளுக்கு இந்த நேரடி கண்காணிப்பு எந்த அளவுக்கு தீர்வு தரப்போகிறது என்பதுதான் இனி கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.