அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் விஜய்யை தொட்டிருக்க கூடாது.. தொட்டவங்கள விஜய் என்னிக்குமே விட்டதில்லை.. விஜய் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரியெல்லாம் கிடையாது.. ஒரு லட்சம் தடவை சொன்ன மாதிரி..

தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் களம் என்பது எப்போதும் பண பலத்திற்கும் அதிகார பலத்திற்கும் இடையிலான மோதலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த மரபார்ந்த கணக்குகளை தகர்க்கும் ஒரு புதிய சக்தி உருவெடுத்துள்ளது. “கடைசி நேரத்தில் ‘பசையை’ இறக்கி வாக்குகளை மாற்றிவிடலாம் என்று நினைக்காதீர்கள்” என தமிழக வெற்றிக் கழகத்தினர் முழங்குவது, திராவிடக் கட்சிகளின் வழக்கமான தேர்தல் வியூகங்களுக்கு விடப்பட்ட நேரடி சவாலாகும்.

பாசத்தால் ஈர்க்கப்பட்டு, மாற்றத்திற்காக காத்திருக்கும் ஒரு தலைமுறையின் வாக்குகளை, வெறும் பணத்தை கொண்டு விலைபேச முடியாது என்கிற எதார்த்தத்தை இந்த தேர்தல் பிரதிபலிக்க போகிறது.

சென்னையின் இதயப்பகுதிகளான ஆர்.கே. நகர் முதல் மயிலாப்பூர் வரை, அரசியல் கட்சிகளின் வியூகங்கள் ஒவ்வொரு தெருவிற்கும் மாறலாம்; ஆனால் மக்களின் மனநிலை மாற்றத்தை நோக்கியே உறுதியாக உள்ளது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வார்டு வாரியாகவும், தெரு வாரியாகவும் ஆட்களை பிடிக்க போராடி கொண்டிருக்கும் வேளையில், தவெக ஒரு விசித்திரமான வெற்றியைப் பெற்றுள்ளது. அவர்கள் வீதிக்கு வந்து ஆட்களை தேடவில்லை, மாறாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒரு ‘விஜய்யை’ உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் ஒரு இளைஞரோ அல்லது ஒரு குழந்தையோ அந்த வீட்டின் அரசியல் முடிவை விஜய்க்கு ஆதரவாக மாற்றும் ஒரு தன்னார்வத் தூதுவராக மாறியுள்ளனர்.

பல தசாப்தங்களாக பணத்தைக் கொடுத்தால் வாக்குகளை உறுதி செய்துவிடலாம் என்று நம்பியிருந்த கட்டமைப்பை, ஒரு தனிமனிதனின் மீதான ஈர்ப்பு நிலைகுலைய செய்துள்ளது. திராவிட கட்சிகள் தங்களின் அரசுத் திட்டங்களையும், கடந்த கால சாதனைகளையும் ஒரு கவசமாக பயன்படுத்தித் தற்காத்து கொள்ள முயலும் வேளையில், தவெக மக்களின் ‘நம்பிக்கையை’ மட்டுமே பிரதான ஆயுதமாக ஏந்தி நிற்கிறது.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், “தி.மு.க-வா அல்லது அ.தி.மு.க-வா?” என்கிற இருமுனை போட்டி என்பது காலாவதியாகிவிட்டது. மாற்றத்தை விரும்பும் பொதுமக்களுக்கும், முதல்முறை வாக்காளர்களுக்கும் தவெக மட்டுமே தற்போதைய ஒரே தேர்வாக மாறியுள்ளது.

இறுதியாக, 2026 தேர்தல் முடிவுகள் என்பது வெறும் வெற்றி-தோல்விக்கான கணக்கு அல்ல, அது தமிழக மக்களின் அரசியல் முதிர்ச்சிக்கான சான்றாகும். வாக்கு இயந்திரங்களில் விழப்போகும் ஒவ்வொரு வாக்கும், பழைய அதிகார வர்க்கத்திற்கு எதிரான ஒரு சீற்றமாகவும், புதிய தலைமுறைக்கான ஒரு வரவேற்பாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Leave a Comment