எடப்பாடி தொகுதியை விட்டு வெளியே வாங்க பாஸ்.. சும்மா நசநசநசன்னு.. ஒரு பிரச்சனைன்னா விஜய் வரமாட்டாருன்னு சொல்றீங்களே… நாங்க பிரச்சனை வரும்போது பதுங்குறவங்க இல்ல, பிரச்சனையே நாங்க வரும்போதுதான் பதுங்கும்! 10 தோல்வி பழனிசாமி எல்லாம் எங்களை விமர்சிக்குதுங்கப்பா.. மற்றும் பலர் ஈபிஎஸ்-ஐ போட்டு தாக்கிய விஜய்..

தமிழகத் தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில், அரசியல் தலைவர்களுக்கு இடையேயான வார்த்தை போரும், தொகுதி வாரியான மோதல்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. குறிப்பாக, ஒரு பிரச்சினை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என்று விமர்சிப்பவர்களை நோக்கி, தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் கேள்விகள் தர்க்கரீதியாகவும் ஆவேசமாகவும் உள்ளன.

பத்து முறைக்கும் மேலாக தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்னரும், அனுபவசாலி என்ற போர்வையில் பிறரை விமர்சிப்பவர்கள், முதலில் தங்களின் அரசியல் வலிமையை நிரூபிக்க வேண்டும் என்கிற விஜய்யின் சவால் எடப்பாடியாரை மறைமுகமாக தாக்கியுள்ளது. மேலும் சொந்த தொகுதியை தாண்டி தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் துணிச்சல் இல்லாதவர்கள், மாற்றத்திற்காக வரும் புதியவர்களை விமர்சிக்கத் தார்மீக தகுதி அற்றவர்கள் என விஜய் ஈபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார்.

“சொந்தத் தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் என்கிற பயத்தில் இருப்பவர்கள், மற்றவர்களின் சின்னத்தை திருடுவதில்தான் குறியாக இருக்கிறார்கள்” என்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடும் விஜய், அதிகார பலத்தை பயன்படுத்தி சின்னங்களை பறிப்பதும், முடக்குவதும் ஒரு தலைவனுக்கு அழகல்ல என்றும் கூறினார்.

எடப்பாடி தொகுதியில் தற்போது நிலவும் சூழல் மிகவும் விசித்திரமாகவும் அதே சமயம் சுவாரசியமாகவும் மாறியுள்ளது. பல ஆண்டுகளாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் பயணித்து, தற்போது சுயேச்சையாக களமிறங்கியுள்ள ஒரு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது. இந்த ஆதரவு என்பது வெறும் தனிநபர் ஆதரவு மட்டுமல்ல, அது ஒரு சித்தாந்த ரீதியான ஒருமைப்பாடு ஆகும். சின்னங்கள் பறிக்கப்பட்டாலும், மக்களின் மனங்களில் இருக்கும் சின்னத்தை யாராலும் திருட முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், அந்த சுயேச்சை வேட்பாளரின் ‘டிவி’ சின்னத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என எடப்பாடி தொகுதி மக்களை விஜய் கேட்டு கொண்டுள்ளார்.

மேல்லும் “டிவி சின்னத்தில் நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும், நமது விசில் சின்னத்திற்கு போடும் வாக்கு” என்றும் விஜய் கூறினார்.

Leave a Comment