இப்போ பாலிடிக்ஸ்ல என்ன கொடுமை நடக்குதுன்னா, “மூணு மாசத்துல விஜய் ஆட்சி காலி ஆயிடும், ஆறு மாசத்துல கவிழ்ந்திடும்”னு எதிர்க்கட்சிக்காரங்க மேடைக்கு மேடை புலம்பிட்டு இருக்காங்க. எப்போ வேணும்னாலும் எலெக்ஷனுக்கு ரெடியா இருங்கன்னு சும்மா பில்டப் வேற கொடுக்குறாங்க. நான் என்ன கேக்குறேன்னா, நிஜமாவே இப்போ எலெக்ஷன் வந்தா உங்களால ஜெயிக்க முடியுமா? முன்னாடி ஏதோ கொஞ்சம் சீட் ஜெயிச்சு எதிர்க்கட்சியா உட்கார்ந்திருக்கீங்க. ஆனா இப்போ சீன் டோட்டலா மாறிடுச்சு. விஜய் மக்களுக்கு சூப்பரான நல்லாட்சி கொடுத்து, பப்ளிக் மத்தியில செம்ம நற்பெயர் வாங்கிட்டாரு. இப்போ மட்டும் தேர்தல் வந்தா, தவெக கூட்டணியோட 200 சீட்டுக்கும் மேல அசால்ட்டா ஜெயிச்சு விஜய் மறுபடியும் கோட்டையப் பிடிப்பாரு. அதுக்கப்புறம் இங்க எதிர்க்கட்சினு சொல்லிக்க ஒருத்தன் கூட இருக்க மாட்டான்.
உண்மையைச் சொல்லணும்னா, விஜய் ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குதோ, அவ்வளவு நாள் திமுக, அதிமுக ரெண்டு பேருக்கும் தான் நல்லது. அதை விட்டுட்டு குறுக்கு வழியில இந்த ஆட்சியைக் கவிழ்க்கப் பார்த்தீங்கன்னா, அது உங்களுக்கே ஆப்பு வச்சிடும். ஒருவேளை சதி பண்ணி விஜய்யோட ஆட்சிக்கு ஏதாச்சும் நெருக்கடி கொடுத்தீங்கன்னா, அவரு இன்னும் பெரிய விஸ்வரூபம் எடுத்து முன்னைவிட அசுர வேகத்துல வந்து சீட்ல உட்காருவாரு. மக்களோட சப்போர்ட் இருக்குற ஒரு தலைவனைப் பவரால வீழ்த்த நினைச்சா, ஜனங்க சும்மா விடமாட்டாங்க.
முன்னாடி எம்ஜிஆர் ஆட்சிக் காலத்துல கூட இப்படித்தான் அவசரப்பட்டு கருணாநிதி ஆட்சியைப் கலைக்கப் பார்த்தாரு. ஆனா அதுக்கப்புறம் நடந்த எலெக்ஷன்ல ஜனங்க எம்ஜிஆர் பக்கமே நின்னு, அவரை இன்னும் பெரிய மெஜாரிட்டில ஜெயிக்க வச்சாங்க. அதே ஹிஸ்டரி தான் இப்போ தமிழ்நாட்டுல மறுபடியும் ரிப்பீட் ஆகப்போகுது. விஜய் ஆட்சியைக் கவிழ்த்துட்டு நாங்க வந்து உட்காரலாம்னு திமுக-வும் அதிமுக-வும் இனிமே பகல் கனவு கூட காணக் கூடாது. இந்தத் திராவிடக் கட்சிகளோட ஆட்டமும் அதிகாரமும் முடிஞ்சு போச்சு.
இனிமே நம்ம ஊர்ல பேச்சு எப்படி இருக்கணும்னா, “இப்போ விஜய்… விஜய்க்கு அடுத்து யார்?” அப்படின்னுதான் யோசிக்கணுமே தவிர, பழசையெல்லாம் நெனச்சுட்டு இருந்தா அது வெறும் கனவாத்தான் போகும். மக்கள் தங்களுக்குத் தேவையான புதுத் தலைவனைத் தேர்ந்தெடுத்துட்டாங்க. இனிமே அவங்க பழைய ரூட்டுக்குத் திரும்ப மாட்டாங்க. மாற்றத்தை விரும்புற மக்களோட பேராதரவோடு இருக்குற முதலமைச்சர் விஜய்யோட சாம்ராஜ்யத்தை எந்தப் பழைய பாலிடிக்ஸ் உத்தியாலயும் ஒன்னும் பண்ண முடியாது!