டெல்லி அரசியலில் தற்போது அரங்கேறி வரும் கலவரங்களும் போராட்டங்களும் வெறும் தர்மேந்திர பிரதானை வீழ்த்துவதற்கான சாதாரண அரசியல் நகர்வுகள் அல்ல; இதன் ஒட்டுமொத்த இலக்கும் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற ஆழமான சதித்திட்டமே ஆகும். கல்வித்துறையின் மீதான கோபத்தை வெளிப்படுத்துவது போல் பாசாங்கு செய்துவிட்டு, திரைக்குப் பின்னால் இருந்து ஒட்டுமொத்த தேசத்தின் நிர்வாகத்தையும் சீர்குலைக்க வேண்டும் என்பதே இந்த நயவஞ்சகக் கூட்டத்தின் பிரதான குறிக்கோளாக உள்ளது. இந்த கரப்பான்பூச்சிகளுக்கு பின்னால் இருந்து கொண்டு, ஒண்ணுமே தெரியாத பாலகன் போல அப்பாவி வேடம் போடும் அரவிந்த் கெஜ்ரிவாலும், எதைக் கையில் எடுத்தாலும் நான் தான் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன் என்று மக்களை ஏமாற்றித் தம்பட்டம் அடிக்கும் ராகுல் காந்தியும் இந்த நாடகத்தின் முக்கியப் பாத்திரங்களாக வலம் வருகிறார்கள்.
இந்தத் தீய சக்திகளின் வரிசையில், தங்களின் சொந்தத் தொண்டர்கள் கூட இல்லாமல் வெறும் கொடிகளுடன் வறண்டு போய்விட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தச் சதியில் கைகோர்த்துக் கொண்டுள்ளன. இவர்களுடன் கைகேர்க்கும் பன்னாட்டு அந்நிய சக்திகளும், நாட்டின் வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் பெருமுதலாளிகளும் சேர்ந்து கொண்டு இந்த அமைதியின்மையை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்கள். பல்தரப்பட்ட சுயநலக் கூட்டங்கள் அனைத்தும் தங்களது சொந்த அரசியல் லாபத்திற்காக ஒரே குடையின் கீழ் திரண்டு, நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க 24 மணி நேரமும் ரகசியக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. இத்தனை பேரும் கை கோர்த்து நடத்தும் இந்த நாடகத்தின் ஒரே நோக்கம், மோடியின் பலமான ஆட்சியை எப்படியாவது பலவீனப்படுத்திவிட வேண்டும் என்பது மட்டுமே.
ஆனால், எதிரிகள் எகிறிக் குதித்து எதையோ சாதித்துவிட்டதாகக் கத்தித் திரிவதைப் பார்த்துவிட்டு, பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் என்றால் அவர் எங்குமே பதுங்கவில்லை அல்லது பயந்து பின்வாங்கவில்லை என்பதை இந்த நாசகாரக் கூட்டங்கள் விரைவில் புரிந்து கொள்ளும். மோடி அமைதி காப்பது என்பது கோழைத்தனமல்ல, மாறாகத் தன் மீது வீசப்படும் ஒவ்வொரு நச்சு அஸ்திரத்திற்கும் ஒட்டுமொத்தமாக சேர்த்து ஒரே அடியில் பதிலடி கொடுக்க அவர் வியூகம் வகுத்து வருகிறார் என்பதற்கான மௌன எச்சரிக்கையாகும். தன் மீது தொடுக்கப்படும் அவதூறுகளையும், தேசத்திற்கு எதிராக நடக்கும் சதிகளையும் ஒவ்வொன்றாகப் புள்ளி விவரங்களுடன் சேகரித்து வரும் அவர், தக்க நேரத்தில் அந்த அயோக்கியர்கள் அனைவருக்கும் சேர்த்து அசல் வட்டியுடன் சேர்த்து செம ‘ஆப்பு’ வைக்கத் தயாராகிவிட்டார்.
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் இந்தக் கரப்பான்பூச்சி அரசியல்வாதிகள், தங்களின் தற்காலிகக் கூச்சலால் நாடே தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகக் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த அந்நிய சக்திகளின் பலத்தையும், தொழிலதிபர்களின் பணபலத்தையும் நம்பி களமிறங்கியிருக்கும் இந்தக் குப்பைக் கூட்டத்தின் வேர்களை அடியோடு வெட்டி எறியும் நேரம் நெருங்கிவிட்டது. யார் எங்கு நின்று எத்தகைய சதிவலைகளைப் பின்னினாலும், தேசத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த நினைக்கும் எவரும் தப்பிக்க முடியாது என்பதை மோடியின் அதிரடி நடவடிக்கைகள் விரைவில் உணர்த்தும். ஊழல்வாதிகளும் சந்தர்ப்பவாதக் கூட்டங்களும் தங்களின் இஷ்டத்திற்கு ஆடிய ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் கனிந்துவிட்டது.
தனிமனித தாக்குதல்களையும், திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்களையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டுள்ள இந்த எதிர்க்கட்சிகளின் முகமூடி விரைவில் பொதுமக்கள் முன்னிலையில் முற்றிலுமாகக் கிழித்தெறியப்படும். இந்தியாவின் பாதுகாப்பையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் சீர்குலைக்க நினைக்கும் இந்தத் தீய சக்திகளுக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பே மிகக் கடுமையானதாக இருக்கப் போகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் மிரட்டல் அரசியலும், ராகுல் காந்தியின் பொய் மூட்டைகளும், வறண்டுபோன கம்யூனிஸ்டுகளின் கூச்சல்களும் இந்தச் சதிவலைக்குள் சுக்குநூறாகச் சிதறிப் போகும். தேசத்திற்குத் துரோகம் இழைக்கும் எவரும் தப்பிக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசு கறாராகக் களமிறங்கியுள்ளது.
அடுத்தடுத்து அரங்கேறப் போகும் அரசியல் திருப்பங்கள் இந்தச் சதிக்கூட்டத்தை நிலைகுலையச் செய்யும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. மோடியின் பொறுமையைச் பலவீனமாக நினைத்துத் தப்புக்கணக்குப் போட்டவர்களின் ஒட்டுமொத்த சாம்ராஜ்யமும் விரைவில் தரைமட்டமாகப் போவது உறுதி. நாட்டைத் தங்களின் சுயநலத்திற்குக் குத்தகைக்கு எடுக்கலாம் என்று நினைத்த அத்தனை பேருக்கும் சேர்த்து வைக்கப்பட்டுள்ள அந்தப் பிரம்மாண்டமான அஸ்திரத்தின் வீச்சு தமிழக அரசியலையும் தாண்டி நாடே உற்றுநோக்கும் ஒரு சரித்திர நிகழ்வாக மாறப் போகிறது. எதிரிகளின் சதித்திட்டங்கள் அனைத்தும் சாம்பலாகி, தேசத்தின் தருமம் வெல்லும் அந்தத் தருணம் வெகு தொலைவில் இல்லை.