தமிழக அரசியல் களமே தற்போது சட்டசபையை நோக்கி திரும்பியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களில் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு விஜய் என்ன பதில் கொடுக்கப்போகிறார் என்பதுதான் இப்போது ஹாட் டாபிக். குறிப்பாக, முதலமைச்சரின் பதில் உரையில் முக்கியமான அரசியல் அறிவிப்புகளும், எதிர்க்கட்சிகளுக்கு நேரடியான பதிலடிகளும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனால் சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் பார்க்க மக்கள் ஆர்வமாக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, உதயநிதி தரப்பில் இருந்து விஜய்யை கிண்டல் செய்யும் வகையில், “மூன்று நாட்கள் டைம் இருக்கிறது… பிரிப்பேரேஷன் செய்து வாருங்கள்” என்று கூறப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் சட்டமன்ற அட்டவணையில் முதலமைச்சரின் பதில் உரை திங்கட்கிழமையே நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ‘டைம்’ விவகாரமும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் அந்த கூடுதல் நேரத்தை எதற்காக பயன்படுத்துகிறார் என்பதுதான் இப்போது சுவாரஸ்யமான கேள்வியாக மாறியுள்ளது.
மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் நடந்ததாக தவெக தரப்பு முன்வைக்கும் பல்வேறு விவகாரங்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், அரசின் செலவுகள், நிர்வாக முடிவுகள் என பல விஷயங்களை புள்ளிவிவரங்களுடன் விஜய் சட்டசபையில் முன்வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. குறிப்பாக, திமுகவுக்கு எதிராக விஜய் அதிரடியான பட்டியலை வாசித்தால், சட்டசபைக்குள்ளேயே அரசியல் அனல் பறக்க வாய்ப்புள்ளது. “வார்த்தையால் பதில் சொல்வாரா… இல்லை புள்ளிவிவரங்களால் பதிலடி கொடுப்பாரா?” என்பதுதான் இப்போது எழும் கேள்வி.
அதே நேரத்தில், விஜய்யின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதும் முக்கியமான விஷயம். கடுமையான விமர்சனங்கள் வந்தால் அமளி ஏற்படுமா, வெளிநடப்பு செய்யப்படுமா அல்லது சபை நடவடிக்கைகளே பாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் சட்டசபை நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் சூழலில், எந்தவொரு அமளியும் மக்களின் நேரடி கவனத்துக்கு செல்லும். “விஜய்யை பேசவிடாமல் தடுக்க நினைத்தால்… அந்த முயற்சியே அவருக்கு பிளஸ்ஸாக மாறிவிடுமா?” என்ற விவாதமும் எழுந்துள்ளது.
மொத்தத்தில், இது ஒரு சாதாரண பதில் உரையாக இருக்கப்போவதில்லை என்ற எதிர்பார்ப்புதான் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. விஜய் தனது அரசின் சாதனைகளை பட்டியலிடப் போகிறாரா, திமுகவின் கடந்தகால ஆட்சியை குறிவைத்து தாக்கப்போகிறாரா அல்லது இரண்டையும் சேர்த்து ஒரு அரசியல் பதிலடியை கொடுக்கப்போகிறாரா என்பதுதான் நாளைய ஹைலைட். மறுபுறம், திமுக என்ன மூவ் எடுக்கப்போகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். “சட்டசபையில் யார் அதிக சத்தம் போடுகிறார்கள் என்பது முக்கியமல்ல… யார் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள் என்பதுதான் முக்கியம்!” நாளைய சட்டசபை காட்சிகள் அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.