Flipkart வெளியிட்ட டீசர்… விரைவில் இந்தியா வரும் போக்கோ F7… என்ன ஸ்பெஷல் தெரியுமா?

போக்கோ பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை உணர்த்தும் வகையிலான டீசர்கள் தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும்,

முழுசா ரூ. 3000 தள்ளுபடி… என்னது ரெட்மி 5ஜி போனின் விலை ரூ. 7,999 தானா? 

இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் பிரிவில் ரெட்மி A சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக இந்தியாவில் ரெட்மி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. எனினும், பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தள்ளுபடி நாட்களில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை சற்று குறைக்கப்படும்.

அந்த வரிசையில், ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு அமேசான் இந்தியா வலைதளத்தில் அமலில் உள்ளது. இந்தியாவில் ரூ. 10,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது சிறப்பு தள்ளுபடியின் கீழ் ரூ. 7,999 விலையில் கிடைக்கிறது.

இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 3000 அதாவது 27 சதவீதம் குறைவு ஆகும். இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பிரைம் வாடிக்கையாளர்கள் அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக், பிரைம் சந்தா இல்லாதவர்களுக்கு 3 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எனினும், கேஷ்பேக் சலுகை மாத தவணை மற்றும் அமேசான் பிஸ்னஸ் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது.

இதுதவிர வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், ஜிஎஸ்டி விலைப்பட்டியல் கொண்ட வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு 28 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது இந்த சலுகை ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி A4 5ஜி மாடலில் 6.88 இன்ச் HD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்பட), 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், புகைப்படங்களை எடுக்க 50MP டூயல் பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5160mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்மார்ட்போனுடன் 33 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓ.எஸ். , 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.

6500mAh பேட்டரி, 50MP கேமரா… மலிவு விலையில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவித அம்சங்கள் நிறைந்த மாடல்களை அறிமுகம் செய்வதில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக விவோ விளங்குகிறது. உலகம் முழுக்க ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் விவோ நிறுவனம் சில

முழுசா ரூ. 12,000 தள்ளுபடி… சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் சான்ஸ் இதுதான்..! 

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் தர ஸ்மார்ட்போன் சீரிஸ் கேலக்ஸி S25 அல்ட்ரா. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த மாடலின் விற்பனை

மிட்-ரேஞ்சில் மிரட்டும் மோட்டோ – விரைவில் வெளியாகும் புது ஸ்மார்ட்போன் மாடல்

மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று மோட்டோ எட்ஜ் 60. முன்னதாக மோட்டோ நிறுவனம் தனது மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த

6000mAh பேட்டரி, வேற லெவல் டிசைன் – அடுத்த வாரம் வெளியாகும் புது ஐகூ ஸ்மார்ட்போன்

இந்திய சந்தையில் குறைந்த விலையில் அதீத அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து புகழ் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக ஐகூ விளங்குகிறது. இந்நிறுவனம் தனது புதிய Z10

அறிமுகமானதும் ரூ. 10,000 வரை சலுகையா? புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு குவியும் ஆர்டர்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. ஃபிளாக்ஷிப் தர அம்சங்கள் நிறைந்த ஒன்பிளஸ் 13s மாடலில் 5850mAh

16GB ரேம், 5500mAh பேட்டரி… ரூ. 16,999 விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

டெக்னோ நிறுவனத்தின் புதிய Pova Curve 5G ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 அல்டிமேட் பிராசஸர் கொண்டிருக்கிறது.

நத்திங் போன் புது எடிஷன் அறிமுகம்- என்ன ஸ்பெஷல்..?

நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நத்திங் போன் 2a பிளஸ் கம்யுனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது டிசைன், அம்சங்கள் அடிப்படையில் போன் 2a பிளஸ்

எல்லாமே புதுசு.. மிரட்டும் ஐகூ 13.. விலை எவ்வளவு?

ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஐகூ 13 ஸ்மார்ட்போனை ஒருவழியாக அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஐகூ 13 மாடலில் 6.82