latest news
Restyle: இன்ஸ்டாவோட இந்த அப்டேட் உங்களுக்கு வந்துருச்சா?
ஃபேஸ்புக்கின் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நிறுவனம், Restyle என்ற புதிய அப்டேட்டைக் கொண்டுவர இருக்கிறது. இதுல என்னலாம் பண்ணலாம்?
Instagram’s Restyle
இந்த வசதியைப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோரியில் இருக்கும் போட்டோஸ், வீடியோஸை நீங்கள் மெட்டா ஏஐ-யைப் பயன்படுத்தி எடிட் செய்துகொள்ளலாம். கூகுள் போட்டோஸின் `Help me edit’ வசதியைப் போலவே ப்ராம்ப்டுகளைக் கொண்டு எடிட் செய்துகொள்ள முடியும்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், `புதிய Restyle ஆப்ஷன் மூலம் உங்கள் போட்டோ, வீடியோவில் இருக்கும் தேவையற்றவைகளை எளிதாக நீக்கிக் கொள்ளலாம். அதேபோல், whimsical effect மூலம் வைபையே மொத்தமாக மாற்றிக்கொள்ளவோ அல்லது உங்கள் நண்பர்களோடு இணைந்து புதிய டிரெண்டையும் தொடங்க முடியும்.

இன்ஸ்டாவில் ஏற்கனவே ஏஐ மூலம் போட்டோக்களை எடிட் செய்துகொள்ளும் வசதி இருந்தும், அது மெட்டா ஏஐ சாட்பாட்டில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. இனிமேல், இந்தப் புதிய வசதியின் மூலம் இன்ஸ்டா பயனாளர்கள் அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஸ்டோரியை புதிதாக இணைக்கும்போது பெயிண்ட் பிரஷ் போன்ற ஐகான் மூலம், இந்த வசதியை பயனாளர்கள் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
