latest news
50 எம்பி கேமரா.. 5000mah.. அசத்தல் ஆஃபரில் மோட்டோரோலா போன்.. என்ன மாடல் தெரியுமா..?
 
																								
												
												
											மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட புதிய மொபைல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. மேலும் பட்ஜெட் விலையில் அதிக சிறப்பம்சங்களை கொடுக்கும் ஒரு நிறுவனம் அது மோட்டோரோலா தான். அந்த வகையில் மோட்டோரோலா ஜி45 5g மொபைல் பட்ஜெட் விலையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் இருந்தாலும் தற்போது அந்த மொபைல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதன்படி flipkart தளத்தில் தள்ளுபடி விலையில் இந்த மோட்டரோலா ஜி45 5ஜி மொபைல் பத்தாயிரம் விலையில் கிடைக்கிறது. மேலும் காட் ஆப்பர் கேஷ்பேக் சலுகையும் உள்ளது எனவே இந்த மொபைலை இன்னும் குறைவான விலைக்கு வாங்க முடியும்.

moto g45 5g
மோட்டோரோலா ஜி45 5g சிறப்பம்சங்கள் :
இதில் ஸ்னாப்டிராகன் 6 எஸ் ஜென் 3 எஸ் ஓ சி சிப்செட் கொண்டு உள்ளது. டிஸ்ப்ளே பொருத்தவரையில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் 1600×720 பிக்சல்கள் கொண்டு 120 hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடக்சன் இந்த டிஸ்ப்ளேவில் உள்ளது.
மேலும் டால்பி அட்மாஸ் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த மொபைலில் வருகிறது. ஒஎஸ் பொருத்தவரை ஸ்டாக் ஆண்ட்ராய்டு 14 os உடன் இயங்குகிறது. ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் என்றாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்டில் கிடைக்கும்.
இதில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்புற செல்பி கேமரா பொருத்தவரையில் 16 மெகாபிக்சல் கொண்டு வருகிறது. இதில் 5000mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது அதை சார்ஜ் செய்வதற்கு 18w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் ip 52 டஸ்ட் மற்றும் வாட்டர் தடுப்பு பாதுகாப்பு உள்ளது. இந்த மொபைலில் type-c சார்ஜிங் போட்டுடன் வருகிறது, மேலும் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியும் உள்ளது. இது 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.
 
																	
																															
 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											 
											 
											 
											