Connect with us

tech news

மினுமினுக்கும் புதிய நிறம்… 6000mAh பேட்டரி, 16GB ரேம்… பங்கம் செய்த ஐகூ

Published

on

ஐகூ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஐகூ 13 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் அப்போது முதல் லெஜன்ட் மற்றும் நார்டோ கிரே என இரண்டு நிறங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. எனினும், தற்போது இந்த ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 6000mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

இந்திய சந்தையில் ஐகூ 13 புதிய நிறம் ஏஸ் கிரீன் என அழைக்கப்படுகிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54,999 என்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஏஸ் கிரீனுடன் ஏற்கனவே உள்ள லெஜண்ட் மற்றும் நார்டோ கிரே சேர்த்து ஐகூ 13 ஸ்மார்ட்போன் தற்போது மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 12-ம் தேதி தொடங்குகிறது.

அம்சங்கள்:

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஐகூ 13 ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் LTPO AMOLED ஸ்கிரீன், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் ஐகூ பிரான்டின் பிரத்யேக கியூ2 கேமிங் சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டிருக்கும் ஐகூ 13 ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 7, ப்ளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 1 கொண்டிருக்கிறது. 8.13 மில்லிமீட்டர் தடிமன் கொண்டிருக்கும் ஐகூ 13 எடை 213 கிராம்கள் ஆகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *