tech news
இனி அப்படி செய்யாதீங்க.. வாட்ஸ்அப்-இல் வேற லெவல் அப்டேட்
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். பல நாடுகளில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்களுக்கு செயலியில் புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
அந்த வரிசையில் வாட்ஸ்அப் செயலியில் டெஸ்டிங் செய்யப்படும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை Wabetainfo வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப் டெஸ்டிங் செய்யும் புது அம்சம் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் வாட்ஸ்அப்பில் மற்றவர்கள் வைத்த ஸ்டேட்டஸ் அப்டேட்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் பயனர்கள் வைக்கும் ஸ்டோரிக்களில் யாரையும் டேக் (Tag) செய்திருந்தால், அதனை டேக் செய்யப்படும் நபரும் ரீஷேர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்-இல் பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களில் யாரையும் டேக் செய்யலாம். இவ்வாறு அவர்கள் டேக் செய்யும் நபர்களும் அந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ரீஷேர் செய்ய முடியும்.
தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷில் மட்டும் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. டெஸ்டிங் முடிந்து பிறகு இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும். எனினும், இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளன.