tech news
8300mAh பேட்டரியுடன் உருவாகும் புது ஸ்மார்ட்போன்… லீக் ஆன முக்கிய தகவல்..!
ஹானர் நிறுவனம் விரைவில் தனது X60 சீரிசின் மேம்பட்ட மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே புதிய ஸ்மார்ட்போன்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கும் நிலையில், தற்போது சீனாவின் வெய்போ தளத்தில் புது விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டர் – Panda is Bald வெய்போ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஹானர் X70 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் ஹானர் X70 ஸ்மார்ட்போன் 6.79 இன்ச் ஃபிளாட் டிஸ்ப்ளே மற்றும் 1.5K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முந்தைய X60 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் AMOLED பேனல் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. முந்தைய ஹானர் X60 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சமாக அதன் பேட்டரி இருக்கும் என்று தெரிகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஹானர் X70 ஸ்மார்ட்போன் 8300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. முந்தைய X60 ப்ரோ மாடலில் 6600mAh பேட்டரி மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் 80 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. மெமரியை பொருத்தவரை ஹானர் X70 மாடலில் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சற்றே தடிமனாகவும், அதிக எடை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய ஸ்டான்டர்டு வேரியண்ட் 7.7mm மற்றும் 193 கிராம் எடை கொண்டிருந்தது. புதிய X70 மாடல் 7.9mm தடிமனாகவும் எடை 199 கிராம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் வைட், புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் கேமரா, ரேம் மற்றும் விலை விவரங்கள் தொடர்ந்து மர்மமாகவே உள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் X60 விலை 1199 யுவான்களும், X60 ப்ரோ மாடல் விலை 1499 யுவான்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
