tech news
அசத்தல் கேஷ்பேக்கில் கிடைக்கும் ஆப்பிள் ஐபோன்… அதுக்குன்னு இவ்வளவா..?
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 மாடலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 4000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ஐபோனின் விலை மேலும் குறையும்.
தற்போது விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் அமேசான் பிரைம் டே 2025 சேல்-இல் இதன் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
சலுகை விவரங்கள்:
இந்தியாவில் ஐபோன் 16 மாடலின் விலை ரூ. 72,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் அறிமுக விலையான ரூ. 79,990-ஐ விட குறைவு ஆகும். பயனர்கள் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி அல்லது கோட்டக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 4000 கேஷ்பேக் பெற முடியும். இதன் மூலம் ஐபோனின் விலை ரூ. 68,400 என மாறிவிடும்.
பயனர்கள் பழைய ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ஐபோன் 16-இன் விலை மேலும் குறையும். இது பயனர்கள் எக்சேஞ்ச் செய்யும் பழைய சாதனத்தின் மாடல் மற்றும் அதன் நிலையை பொருத்து விலை குறைப்பு இருக்கும். ஐபோன் 16 மாடல் பிளாக், பின்க், டியல், அல்ட்ரா-மரைன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
அம்சங்கள்:
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஐபோன் 16 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ18 சிப்செட், 8 ஜிபி வரை ரேம், 128 ஜிபி மெமரி, ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் அம்சங்கள், 48MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஆக்ஷன் பட்டன், ஐஓஎஸ் 18, 3561mAh பேட்டரி, யுஎஸ்பி டைப் சி கேபிள் அல்லது மேக்சேஃப் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
