tech news
விளம்பரமே வராது.. ₹ 59-க்கு Spotify பிரீமியம் சந்தா
 
																								
												
												
											ஸ்வீடனை சேர்ந்த ஆடியோ ஸ்டிரீமிங் சேவை வழங்கும் நிறுவனம் ஸ்பாடிஃபை (Spotify). இந்தியாவில் வேகமாக வளர்ந்து, முன்னணி ஆடியோ ஸ்டிரீமிங் தளமாக ஸ்பாடிஃபை விளங்குகிறது. எனினும், நாட்டில் பிரீமியம் சந்தா வைத்திருப்போர் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஸ்பாடிஃபை முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், குறுகிய கால சலுகையாக ஸ்பாடிஃபை பிரீமியம் சந்தாவை மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த சலுகை பயனர்களுக்கு விளம்பர இடைவெளி இன்றி ஸ்பாடிஃபை சேவையை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. மேலும், ஆடியோ தரமும் அதிகளவில் வழங்கப்படுகிறது.

தற்போது ஸ்பாடிஃபை அறிவித்து இருக்கும் சலுகையின் படி பயனர்கள் ஸ்பாடிஃபை பிரீமியம் சந்தாவை ரூ. 59 விலையில் வாங்கிட முடியும். வழக்கமாக இந்த சலுகையின் விலை மாதம் ரூ. 119 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை பயனர்களுக்கு மூன்று மாத கால ஸ்பாடிஃபை பிரீமியம் சந்தாவை வெறும் 59 ரூபாய்க்கு வழங்குகிறது.
எனினும், இந்த சலுகை முதல்முறை சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஏற்கனவே ஸ்பாடிஃபை பிரீமியம் சந்தா பயன்படுத்தியவர்கள் இந்த சலுகையில் பயன்பெற முடியாது. விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை இந்திய பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை ஸ்பாடிஃபை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சலுகைதவிர ஸ்பாடிஃபை தனது இதர சலுகைகளை ஒருமாத கட்டணத்தில் இரண்டு மாதங்களுக்கான சந்தா வழங்கி வருகிறது. ஸ்பாடிஃபை பிரீமியம் டுயோ, ஃபேமிலி மற்றும் ஸ்டூடண்ட் சந்தாக்களில் வழங்கப்படுகிறது.
 
																	
																															
 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											 
											 
											 
											