tech news
மிக மலிவு விலை, வழக்கத்தை விட Extra வேலிடிட்டி… வோடபோன் ஐடியா வேற லெவல் அறிவிப்பு
வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் இந்திய சந்தையில் தனது பயனர்களுக்கு வி கியாரண்டி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2ஜி மொபைல் பயன்படுத்தும் பிரீபெயிட் சந்தாதாரர்கள் பயனபெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக தொகையில் ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு 2 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படும்.
அதன்படி 12 மாதங்களுக்கு தொடர்ச்சியாக இவ்வாறு ரீசார்ஜ் செய்யும் போது பயனர்கள் கிட்டத்தட்ட கூடுதலாக 24 நாட்களுக்கு வி சேவைகளை பயன்படுத்த முடியும். ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திலும் 30 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி வழங்கும் போது பயனர்கள் அதிக முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
முக்கிய அம்சங்கள்:
பிரீபெயிட் 2ஜி மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ரூ. 199 மற்றும் அதிக விலை கொண்ட ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படும்.
ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் 2 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படும். அதன் ஆண்டுக்கு 24 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி பெற முடியும்.
28 நாட்களுக்கும் அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களிலும் இந்த சலுகை பொருந்தும்.
ரூ. 299 மற்றும் இதை விட விலை உயர்ந்த பிரீபெயிட் ரீசார்ஜ் செய்யும் 4ஜி மற்றும் 5ஜி பயனர்களுக்கு 130 ஜிபி வரை கூடுதல் டேட்டா கிடைக்கும். இதில் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
சலுகை விவரங்கள்:
வி ரூ. 199 ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ரூ. 209 ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ், காலர் டியூன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் சேர்த்து கூடுதலாக 2 நாட்கள் வரை வழங்கப்படுகிறது. ஆகும்.
