Connect with us

recharge offers

நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ்… விலை இவ்வளவு தானா?

Published

on

இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய நிறுவனம் வோடபோன் ஐடியா லிமிட்டெட். பயனர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டாவை வாரி வழங்குவதில் பெயர் பெற்ற நிறுவனமாகவும் வோடபோன் ஐடியா விளங்குகிறது. இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் டேட்டா, டேட்டா ரோல்-ஓவர் என்று வோடபோன் ஐடியா பல்வேறு வகைகளில் பயனர்கள் எதிர்பார்க்கும் பலன்களை வழங்குவதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வரிசையில், வோடபோன் ஐடியா நிறுவனம் ஓடிடி சந்தா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்குவதற்கென இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. வோடபோன் ஐடியா ரூ. 1,198 மற்றும் ரூ. 1,599 என்று இருவேறு விலைகளில் இவை கிடைக்கின்றன. இரு ரீசார்ஜ் திட்டங்களிலும் பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது.

ரீசார்ஜ் தவிர்த்து தனியாக நெட்ஃப்ளிக்ஸ் பேசிக் சந்தா பெற விரும்புவோர் மாதம் ரூ. 199 செலுத்த வேண்டும். எனினும், வோடபோன் ஐடியா ரீசார்ஜ் செய்வோர் இந்த கட்டணம் இல்லாமல் நெட்ஃப்ளிக்ஸ் பேசிக் சந்தாவை கிட்டத்தட்ட இலவசம் என்ற கணக்கில் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு செய்வதற்கு பயனர்கள் வி மொபைல் ஆப் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ. 1198 ரீசார்ஜ் திட்ட பலன்கள்:

ரூ. 1198 விலையில் கிடைக்கும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். இதுதவிர இந்த ரீசார்ஜ் செய்வோர் தினமும் அதிகாலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரை அன்லிமிட்டெட் டேட்டா பயன்படுத்தலாம்.

இது மட்டுமின்றி பயனர்களுக்கு வாரயிறுதி நாட்களில் பயனப்டுத்துவதற்கென டேட்டா ரோல்-ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் 2 ஜிபி வரையிலான டேட்டாவை வாரயிறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பலன்களுடன் சேர்த்து பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ. 1,599 ரீசார்ஜ் திட்ட பலன்கள்:

ரூ. 1,599 விலையில் கிடைக்கும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டத்திலும் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகாலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரை அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

இவைதவிர வாரயிறுதி நாட்களில் பயன்படுத்தாமல் விட்ட டேட்டாவை பயன்படுத்துவதற்கு டேட்டா ரோல்-ஓவர் வசதி மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியாவின் ரூ. 1,199 மற்றும் ரூ. 1,599 ரீசார்ஜ் திட்டங்கள் நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. இவற்றுடன் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *