tech news
இனி ப்ளிப்கார்ட்-லயே DTH, Fastag ரீசார்ஜ் செய்யலாம் – வந்தாச்சு புது அப்டேட்..!
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஷாப்பிங் மட்டுமின்றி பயனர்கள் டிடிஎச், பாஸ்டேக் ரீசார்ஜ் உள்பட பல்வேறு ரீசார்ஜ் மற்றும் பில் கட்டணங்களை செலுத்தலாம். இதுதொடர்பாக ப்ளிப்கார்ட் தளத்தில் ஐந்து புது ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்தும் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
புதிய ஆப்ஷன்களை கொண்டு பயனர்கள் பாஸ்டேக், டிடிஎச் ரீசார்ஜ்கள், லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் மொபைல் போஸ்ட்பெயிட் கட்டணங்களை செலுத்த முடியும். ஏற்கனவே ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மொபைல் பிரீபெயிட் ரீசார்ஜ் மற்றும் மின் கட்டணங்களை செலுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தான் தற்போது புது ரீசார்ஜ் மற்றும் கட்டணம் செலுத்தும் வசதிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இந்த வசதிகளை செயல்படுத்துவதற்காக ப்ளிப்கார்ட் நிறுவனம் பில்டெஸ்க் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி பேமண்ட் சேவை வழங்கும் நிறுவனமாக பில்டெஸ்க் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பயனர்கள் புது வசதிகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் ப்ளிப்கார்ட் யுபிஐ பயன்படுத்தும் பயனர்களுக்கு 10 சதவீதம் வரை சூப்பர்காயின்கள் வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும்தான் வழங்கப்படும்.
2024 நிதியாண்டில் மட்டும் ப்ளிப்கார்ட் தளத்தில் நாடு முழுவதிலும் இருந்து 1.3 பில்லியன் பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் (BBPS) என்ற டிஜிட்டல் பேமண்ட் முறை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை அப்படியே இருமடங்கு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 21,000-க்கும் அதிக பில்லர்கள், 20-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் BBPS சிஸ்டத்தில் கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட பேமண்ட்கள் மின்முறையிலேயே செலுத்தப்படுகின்றன என்று ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.