Connect with us

latest news

இந்தியாவின் முக்கிய நம்பிக்கை தகர்ந்தது.. ஒலிம்பிக்ஸில் தோற்று வெளியேறிய பிவி சிந்து!..

Published

on

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் கண்டிப்பாக பதக்கம் வெல்லுவார் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ரவுண்ட் 16 சுற்றில் அதிர்ச்சிகரமாக வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.

ரியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கத்தினை பேட்மிண்டன் போட்டியில் வென்றவர் பிவி சிந்து. இதனால் இந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பிவி சிந்துவிடம் இருந்து ஒரு பதக்கம் கிடைக்கும் என இந்திய ரசிகர்கள் அதிகமாக நம்பினார்கள். அதை முதலில் உண்மையாக்கும் பொருட்டே முதல் இரண்டு சுற்றில் பிவி சிந்து மிரட்டலான ஆட்டத்தினை ஆடி வெற்றி பெற்றார்.

இதையடுத்து நேற்று இரவு ரவுண்ட் 16 சுற்றில் சீனாவின் பிங் ஜியாயோவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் துவக்கத்தில் பிவி சிந்து அதிகளவில் தடுமாறினார். அதை தொடர்ந்து, பிவி சிந்து புள்ளிகளை குவித்தார். இருந்தும், 21-19, 21-14 என்ற நேர்செட்களில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறினார்.

நம்பிக்கையாக இருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாகி இருக்கும் நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்‌ஷயா சென் மட்டுமே மிச்சம் இருக்கிறார். 16வது சுற்றில் வெற்றி பெற்றுள்ள லக்‌ஷயா காலிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். ஆகஸ்ட் 2ஆம் தேதி நடக்கும் காலிறுதிப் போட்டியில் தைவான் நாட்டைச் சேர்ந்த சோ டியான் செனை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *