Connect with us

tech news

8GB ரேம், 5000mAh பேட்டரி, AMOLED ஸ்கிரீன்… மலிவு விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published

on

லாவா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் லாவா பிளேஸ் AMOLED 5ஜி என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் AMOLED டிஸ்ப்ளே கொண்ட மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இந்த மாடல் இருக்கும். வலைதள விவரங்களில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய லாவா பிளேஸ் AMOLED 5ஜி மாடலில் 6.67 இன்ச் Full HD+ 3D கர்வ்டு எட்ஜ் AMOLED, 2400×1080 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மூன்றுவகை ரேம் ஆப்ஷனுடன் 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்படுகிறது. 128 ஜிபி தவிர்த்து இந்த ஸ்மார்ட்போனில் மெமரியை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்படவில்லை.

புகைப்படங்கள் எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி லென்ஸ் மற்றும் LED பிளாஷ், 16 எம்பி செல்பி கேமரா மற்றும் ஸ்கிரீன் பிளாஷ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய லாவா பிளேஸ் AMOLED 5ஜி மாடல் டைட்டானியம் கிரே மற்றும் ஸ்டார்லைட் பர்ப்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை தேதி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.