tech news
16GB ரேம், 50MP கேமரா… ரூ. 8200 தள்ளுபடியில் கிடைக்கும் நத்திங் ஸ்மார்ட்போன்
நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது அனைத்து விலை பிரிவுகளிலும் தனது ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் மிட் ரேஞ்ச் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் தான் நத்திங் போன் 2a பிளஸ். ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நத்திங் ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
27 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும் நத்திங் போன் 2a பிளஸ் ஸ்மார்ட்போன் தற்போது 21,799 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 8200 வரை குறைவு ஆகும். இத்துடன் பிரைம் சந்தா வைத்திருப்போர் அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதமும், பிரைம் சந்தா இல்லாதவர்களுக்கு 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவைதவிர நத்திங் போன் 2a பிளஸ் ஸ்மார்ட்போன வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ் செய்து அதிகபட்சம் ரூ. 20,500 வரை தள்ளுபடி பெறுகிறது.
அம்சங்கள்:
நத்திங் போன் 2a பிளஸ் மாடலில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், மீடியாடெக் டிமென்சிட்டி 7350 ப்ரோ 5ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50எம்பி பிரைமரி கேமரா, 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு சார்ந்த நத்திங் ஓஎஸ் கொண்டுள்ளது.
இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, என்எப்சி, ஜிபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 50 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிக் வசதி, வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 56 நிமிடங்களில் முழு சார்ஜ் செய்துவிடும்.
