latest news
கம்மி பட்ஜெட்ல ஒரு நல்ல மொபைல் வேணுமா?..அப்போ இத வாங்குங்க..
 
																								
												
												
											ஸ்மார்ட் போன்கள் பல பல புது வசதிகளுடன் தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளது. ஒவ்வொரு மொபைலின் தனித்துவமான டிசைன், அதன் திரை, பேட்டரி தன்மை மற்றும் இன்னும் தேவையான வசதிகளை பொறுத்து இது ரசிகர்கள் மனதில் இடம் பெறுகிறது. அந்த வரிசையில் தற்போது OnePlus Nord CE3 lite மொபைல் வந்துள்ளது. இதனை பற்றிய தகவல்களை பார்ப்போம்.
டிஸ்ப்ளை:

6.5 inch LCD screen
5G தொழில்நுட்பத்துடன் வந்துள்ள OnePlus Nord CE3 lite மொபைலானது 6.5இன்ச் LCD திரையையும் 120 Hz FHD+ துல்லியத்தையும் கொண்டுள்ளது. ஆனால் இதன் 680nits பிரைட்நெஸ் இதனை வெளிச்சத்தில் பார்க்க கடினமானதாக உள்ளது.
மெமரி:
இந்த மொபைலின் 8ஜிபி RAM 128ஜிபி/256ஜிபி என இரு வகைகளில் கிடைகின்றது. 128ஜிபி வகை ரூ.19,999க்கும் 256ஜிபி வகையானது ரூ.21,999க்கு விற்பனையாகிறது. இதன் 8.3மில்லிமீட்டர் தடிமனுடனும் 195 கிராம் எடையும் கொண்டது.
கேமரா:

108MP back camera
இந்த மொபைலானது 108mp பின்புற கேமராவையும் 16mp முன்புற செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
பேட்டரி:
இதன் பேட்டரி 5000mAh திறனையும் 6-7 மணி நேரம் ஸ்கிரீன் நேரத்தையும் கொண்டுள்ளது. மேலும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.
 
																	
																															
 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											 
											 
											 
											