Connect with us

recharge offers

ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லிவ் உள்பட 14 OTT பயன்படுத்தலாம்… ரூ. 202 வோடபோன் ஐடியா திட்டம் பற்றி தெரியுமா?

Published

on

உலகின் பல்வேறு நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் தற்போது ஓடிடி (OTT) தளங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன. முன்னணி ஓடிடி தளங்கள் தவிர்த்து பலவகை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்களை வழங்குவதற்கென ஏராளமான ஓடிடி தளங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

பயனர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஓடிடி தளங்கள் பயனர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.

அதன்படி ஓடிடி மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பயனர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, பயனர்களிடம் ஓடிடி தளங்களை கொண்டு சேர்ப்பது மற்றும் அவர்கள் மத்தியில் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்கான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வரிசையில் வோடபோன் ஐடியா நிறுவனம் பயனர்களுக்கு ஓடிடி சந்தா வழங்குவதற்கென ஏராளமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.

இதில் ரூ. 202 விலையில் கிட்டத்தட்ட 14 ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்கும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

வி (வோடபோன் ஐடியா) ரூ. 202 திட்ட பலன்கள்:

ரீசார்ஜ் விலை – ரூ. 202
டேட்டா – 5 ஜிபி
வேலிடிட்டி – ஒரு மாதம்
சர்வீஸ் வேலிடிட்டி – சர்வீஸ் வேலிடிட்டி இல்லை

இந்த ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஃபேன்கோடு (Fancode), க்ளிக் (Klikk), சௌபால் (Chaupal), மனோரமா மேக்ஸ் (manorama Max), நம்ம ஃப்ளிக்ஸ் (nammaflix), பிளேஃபிக்ஸ் (playfix), டிஸ்ட்ரோ டிவி distro tv, ஷீமாரூ மீ (shemaroo me), யப் டிவி (yupptv), நெக்ஸ்ஜிடிவி(nexgtv), பாக்கெட் ஃபிலிம்ஸ் (pocket films) மற்றும் அட்ரங்கி (atrangi) உள்ளிட்ட தளங்களுக்கான சந்தா வழங்குகிறது. இதுதவிர சுமார் 400 டிவி சேனல்களை கண்டுகளிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.