recharge offers
ரூ. 11-க்கு 10GB டேட்டா… ஒரே போடு போட்ட ஜியோ, ஏர்டெல்
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல். இரு நிறுவனங்களும் பயனர்களுக்கு வெவ்வேறு வகைகளில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகின்றன.
மேலும், ரீசார்ஜ் திட்டங்களில் திடீர் விலை குறைப்பு, பழைய விலையில் அதிக பலன்கள் என அடிக்கடி ரீசார்ஜ் திட்ட பலன்களை மாற்றி சந்தையில் போட்டியை ஏற்படுத்தவும், எதிர்கொள்ளவும் செய்கின்றன.
அந்த வரிசையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது பயனர்களுக்கு ரூ. 11 விலையில் ரீசார்ஜ் திட்டம் வழங்குகின்றன. பயனர்களுக்கு குறுகிய காலத்திற்கு டேட்டா பலன்களை வழங்கும் நோக்கில் இந்த ரீசார்ஜ் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 11 டேட்டா ஒன்லி ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த டேட்டா ஒரு மணி நேரத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.
இதே போன்று ஏர்டெல் நிறுவனமும் ரூ. 11 விலையில் டேட்டா மட்டும் வழங்கும் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டிருக்கிறது. ஏர்டெல் ரூ. 11 விலை ரீசார்ஜ் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகிறது.
எனினும், இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டியும் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே பொருந்தும். இதில் பயனர்கள் அதிகபட்சம் 10 ஜிபி வரையிலான டேட்டா பயன்படுத்த முடியும். 10 ஜிபி அளவை கடந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 64KB ஆக குறைக்கப்பட்டு விடும்.
