Cricket
தோனியால நடக்கவே முடியல.. இனி ஐபிஎல் கஷ்டம்.. பகீர் கிளப்பும் முன்னால் கிரிக்கெட் வீரர்
 
																								
												
												
											மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக கிடைக்கப்பெற்ற மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர். ஒரு கேப்டனாக இவர் செய்யாத சாதனையே கிடையாது. டி20 ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடர் என்று இவர் வெல்லாத கோப்பைகளே கிடையாது.
ஐபிஎல்லில் 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தற்போது வரை விளையாடி வருகிறார். இதுவரை 10 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று அதில் 5 முறை கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் அதிக முறை கோப்பையை வென்ற பெருமைக்கு சொந்தக்காரர் எம் எஸ் தோனி. தன்னுடைய அணிக்காக விளையாடும் போதும் வெளியூரில் சென்று எதிரணியை விளையாடும் போது அவருக்கு கிடைக்கின்ற ரசிகர்கள் கூட்டம் வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிடைக்காத கூட்டமாக இருக்கும்.

dhoni
தோனிக்காக தான் ஸ்பான்சர்கள் அதிகம் வருகிறார்கள் என்று ஒரு கருத்துக்கணிப்பே நிகழ்ந்துள்ளது. தோனி இருக்கும் வரை மட்டும்தான் ஐபிஎல் கான ரசிகர்கள் கூட்டம் இருக்கும் அவர் ஓய்வு பெற்ற பின் அதில் பாதி அளவு குறையும் என்று பல முன்னால் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் வீரருமான அனிருதா ஸ்ரீகாந்த் தோனியை விமர்சித்துள்ளார். ”தோனி நடந்து சென்று கதவை திறக்கவே கஷ்டப்படுகிறார். அவர் மூட்டு ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளது. அவருடைய மூட்டு பிரச்சனையால் அவர் எழுந்து நடந்து சென்று கதவை திறக்கவே கஷ்டப்படுகிறார். சிஎஸ்கே மீது உள்ள மிகுந்த அன்பிற்காகவும் ரசிகர்களுக்காகவும் மட்டுமே விளையாடுகிறார்”. என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
																	
																															
 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											 
											 
											 
											