Cricket
தோனிக்காக தான் ஐபிஎல்.. அவர் இல்லனா மொத்தமும் க்ளோஸ்.. பிரபல கிரிக்கெட் வீரர் அதிரடி கருத்து
 
																								
												
												
											2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு வரை சுமார் 18 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதியாக நடைபெற்ற சீசனில் சுமார் 18 வருடமாக ஒரு கோப்பையை கூட வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிகள் மோதின. இதில் பெங்களூர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் பிளே ஆப் சென்றால் அது சென்னை, சென்னை என்றால் அது பிளே ஆப்ஸில் கண்டிப்பாக இருக்கும். மீதி மூணு இடங்களுக்கு தான் மற்ற அணிகள் மோதிக் கொள்வார்கள். அப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசியில் இருப்பது இதுவே முதல்முறை. இதற்கு பல காரணங்கள் சொன்னாலும் தோனி தான் முக்கிய காரணம் என்று சமூக வலைதளங்களில் தங்களின் காரசாரமான பதிவுகளை பதிவிட்டு வருகின்றன. 5 முறை சாம்பியன்ஸ் என்ற போதிலும் இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக மோசமான சீசனாக அமைந்துள்ளது.

dhoni
இந்நிலையில் 43 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா..? இல்லை ஓய்வு பெறுவாரா..? இளைஞர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்குமா..? என்று பல விவாதங்கள் இருந்து வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது,
”தோனி இருப்பதால்தான் ஐபிஎல் தொடருக்கு நிறைய ஸ்பான்சர்கள் வருகிறார்கள். ரசிகர்களும் அரங்கம் நிறைந்து காணப்படுகிறார்கள். சென்னை எதிரணியை வெளியூரில் ஆடும் பொழுது அங்கேயும் அந்த அணிக்கு விட சென்னைக்கு அதிக ரசிகர்கள் காணப்படுகிறார்கள். அதற்கு காரணம் தோனி தான். அவர் சென்னை அணியின் ராஜா. அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். அவர் ஓய்வு பெற முடிவு செய்யும்போது அது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்”. என்று தெரிவித்துள்ளார்.
 
																	
																															
 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											 
											 
											 
											