Finance
ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றம்… இனி குடும்பத்தினருக்கும் ஒரே ஜாலி தான்..!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை செயல்படுத்தி வருகிறது. இதில் பென்சன் திட்டத்தில் பெரிய முடிவு எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த மாற்றம் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் பயனளிக்கும். இதற்காக மத்திய நிதி அமைச்சகம் ஓய்வூதிய விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருக்கிறது.
புதிய விதிமுறைகளின் படி, ஓய்வூதியதாரருக்கு 25 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகள் இருந்தால், அவர் திருமணம் ஆகும் வரை குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இதுதவிர, விதவை மற்றும் விவாகரத்து பெற்ற மகள்களும் தங்கள் வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் பெற முடியும். விரைவில் இதற்காக விதிமுறைகள் மாற்றப்பட்டு அது தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும்போது, ஓய்வூதியதாரர்களின் மகள்களும் பயன்பெறலாம்.
முன்னதாக கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு இந்த நடைமுறையை தனது ஊழியர்களுக்கு செயல்படுத்தியது. எனினும் இதனை பல மாநிலங்கள் செயல்படுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது மத்திய பிரதேசம் மற்றும் சில மாநிலங்கள் இந்த திட்டத்தை தங்களது ஊழியர்களுக்கு செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த திட்டம் தொடர்பாக நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில், தற்போது இந்த கோரிக்கை செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாற்றப்பட்ட புதிய விதிமுறைகள் ஜூலை மாதங்களில் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் அமலுக்கு வரும் போது, ஓய்வூதியதாரர்களின் மகள்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருந்தாலோ அல்லது விதவைகளாக இருந்தாலோ அல்லது கைவிடப்பட்ட நிலையில் இருந்தாலோ அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
திருமணம் ஆகாத மகளின் வயது 25 வயதுக்கு மேல் இருந்தாலும், அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அவருக்கு குடும்ப ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும். இதேபோல் விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் வாழ்நாள் முழுக்க ஓய்வூதிய பலன்களை பெறுவார்கள்.
திருத்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் திட்டத்தில் இத்தகைய மாற்றங்கள் செய்வதற்கான பரிந்துரையை ஐஏஎஸ் அதிகாரி ஜிபி சிங்கால் தலைமையிலான பணியாளர் தேர்வு ஆணையம் வழங்கியுள்ளது. விரைவில் இந்த பரிந்துரகள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
