Connect with us

govt update news

இனி எல்லாத்துக்கும் 15 Secs போதும்… UPI-ல வந்திருக்கும் புதிய மாற்றம்… வெளியான சூப்பர் அறிவிப்பு

Published

on

இந்தியாவின் டிஜிட்டல் பேமண்ட் சிஸ்டம் யுபிஐ-இல் (UPI) புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக யுபிஐ சேவைகள் முன்பை விட தற்போது அதிவேகமாகி இருக்கிறது. தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (NPCI) மூலம் வழங்கப்படும் யுபிஐ சேவையில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவது இயல்பான காரியம் தான். பயனர் நலன், பாதுகாப்பான பரிவர்த்தனை உள்ளிட்ட காரணங்களுக்காக யுபிஐ சேவையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை வேகப்படுத்தும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த மாற்றங்கள் வங்கிகள், பயனர்கள் மற்றும் முன்னணி பேமண்ட் சேவை வழங்கும் போன்பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்டவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவை நேற்று (ஜூன் 16) முதல் அமலுக்கு வந்தன. தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் பல்வேறு யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கான நேரத்தை குறைத்துள்ளது. இதன் மூலம் பயனர் அனுபவம் மேம்படும்.

யுபிஐ சேவைகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள்:

தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கான நேரத்தை அதிரடியாக குறைத்துள்ளது.

பணப்பரிமாற்றம் (money transfers), பரிவர்த்தனை நிலையை அறிதல் (transaction status checks) மற்றும் Transaction Reversal ஆகியவற்றுக்கான நேரம் 30 நொடிகளில் இருந்து தற்போது 15 நொடிகளாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல் யுபிஐ முகவரி (UPI Address) சரிபார்ப்பதற்கான நேரம் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளில் ஏற்படும் கால தாமதத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகஸ்டில் மேலும் சில மாற்றங்கள்:

தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆகஸ்ட் மாதம் முதல் மேலும், புதிய மாற்றங்களை செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் யுபிஐ சேவையின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பீக் ஹவர்ஸ் எனப்படும் அலுவல் நேரத்தில் ஏற்படும் சேவை நெருக்கடியை பெருமளவு குறைக்க முடியும்.

இதுதவிர பயனர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே வங்கி கணக்கில் மீதமுள்ள தொகையை யுபிஐ ஆப் மூலம் சரிபார்க்க முடியும்.

பயனர்கள் அதிகபட்சம் 25 லின்க் செய்யப்பட்ட அக்கவுண்ட்களை ஒரு நாளில் பார்க்க முடியும்.

வங்கி கணக்கில் இருந்து தானாக பணம் பிடித்தம் செய்யும் நடைமுறைக்கு ஒரு தவணைக்கு ஒரே ஒரு முயற்சி மற்றும், மூன்று முறை மீண்டும் முயற்சிக்க முடியும்.

இதல் மூன்று முறை மீண்டும் முயற்சிக்கும் நடைமுறை அலுவல் நேரம் இல்லாத சமயத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

யுபிஐ பணப்பரிவர்த்தனைகளில் உச்சபட்ச அலுவல் நேரம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *