Connect with us

Cricket

விராட் கோலி எதுக்காக என்ன பிளாக் செய்தார் தெரியுமா..? மேக்ஸ்வெல் கொடுத்த விளக்கம்…!

Published

on

விராட் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் எதற்காக பிளாக் செய்தார் என்பது குறித்து மேக்ஸ்வேல் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியில் விளையாடி வருபவர் தான் மேக்ஸ்வெல். அதே அணியில் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர்கள் இருவரும் மிக நெருக்கமான நட்பு கொண்டவர்கள். சமீபத்தில் நடந்த புத்தகம் வெளியீட்டு விழாவில் மேக்ஸ்வெல் பங்கேற்றார். அப்போது விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை அதை எதற்காக பிளாக் செய்தார் என்பது குறித்து பேசி இருந்தார்.

நான் ஆர்சிபி அணிக்கு வருவது உறுதியானதும் எனக்கு மெசேஜ் செய்து விராட் கோலி தான் முதலில் என்னை வரவேற்றார். பிறகு அவருடன் இணைந்து நான் முகாமில் பல நாள் பயிற்சி எடுத்திருக்கின்றேன். நாங்கள் கலந்து பேசுவதற்கு சிறப்பான நேரங்கள் அமைந்தது. பிறகு அவரை நான் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்ய தேடும்போது அவரது பெயர் கிடைக்கவில்லை.

அதற்கு முன் அவரை பாலோ செய்ய எனக்கு தோணவில்லை. இன்ஸ்டாகிராமில் அவருடைய பெயரை நான் தேடிய போது கிடைக்காததால் ஒருவரை என்னிடம் விராட் கோலி உங்களை பிளாக் செய்து விட்டார் என்று கூறினார். உங்களை மட்டுமே அவருடைய பெயரை நீங்கள் தேடும் போது கிடைக்காது என்று கூறினார். விராட் கோலி என்னை பிளாக் செய்து இருப்பார் என என்னால் நம்ப முடியவில்லை.

விராட் கோலியிடம் இது குறித்து கேட்டபோது நீ டெஸ்ட் தொடரில் என்னிடம் கோபமாய் நடந்து கொண்டாய். அதனால் உன்னை நான் இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்து இருக்கலாம் என்று கூறினார். அது சரியான காரணம் என்று நினைத்தேன். அதன் பிறகு மீண்டும் என்னை அன் பிளாக் செய்து விட்டார். அப்போது இருந்து இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றோம் என்று கூறியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *